கோவை, செப். 10–
தமிழ்நாடு வணிகர்கள் சங்க பேரவைத்தலைவர் தா.வெள்ளையன் (வயது 76) உடல்நலக்குறைவால் காலமானார். நுரையீரல் தொற்றுக்காரணமாக சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 3ந் தேதி உடல்நலக் குறைவால் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அவர் காலமானார்.