சிறுகதை

தாய்ப்பால் – ராஜா செல்லமுத்து

ராபிடோ பைக் ஓட்டுபவன் குமரவேல். படித்து முடித்து வேலை கிடைக்காததால் தன்னுடைய பைக்கையே ராபிடோ (Rapido) வாக பயன்படுத்தி பணம் சம்பாதித்துக் காெண்டிருக்கிறான். அப்படிச் சம்பாதித்த பணத்தை எல்லாம் தன் வீட்டுக்கு வரும் ஆயிரக்கணக்கான கிளிகளுக்கு உணவு வாங்கிக் கொடுப்பதற்கே பயன்படுத்துகிறான்.

குமரவேலுக்கு அப்பா, அம்மா, அக்கா இருக்கிறார்கள். அப்பா ஓய்பெற்ற ஆசிரியர். அம்மா குடும்பத் தலைவி, அக்கா சாந்திக்குத் திருமணமாகி தலைப் பிரசவத்திற்கு வீட்டிற்கு வந்திருக்கிறாள்.

நதியா, கல்லூரி மாணவி. அன்று கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால், Rapido வில் book செய்கிறாள். குமரவேலின் வண்டியை அவளுக்குக் காட்டுகிறது.

குமரவேலுவின் two wheeler ல் முதன்முதலில் பயணம் செய்கிறாள். பயணம் செய்யும் பாேதே நதியாவுடன் பேசுகிறான் குமரவேல். அவனின் கள்ளங்கபடமற்ற பேச்சு, நதியாவிற்கு பிடித்து விடுகிறது. இதனால் குமரவேலின் பைக்கில் அடிக்கடி பயணம் செய்கிறாள் நதியா. இருவருக்குள்ளும் காதல் ஏற்படுகிறது.

குமரவேலின் வீட்டிற்கு வருகிறாள். அங்கு உணவு சாப்பிட வரும் கிளிகளைப் பார்த்து, ஆச்சர்யப்படுகிறாள். இவ்வளவு கிளிகளுக்கும் உணவு காெடுக்கும் குமரவேலின் பரந்த மனதை எண்ணி வியக்கிறாள் நதியா. அவளுக்கு குமரவேல் மீதிருந்த இருந்த மரியாதை மேலும் கூடுகிறது.

குமரவேலின் அக்கா சாந்திக்கு பிரசவ வலி ஏற்படுகிறது. உடனே அருகிலிருந்த மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறாள். அவள் அழகிய ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறாள்.

காெஞ்ச நாட்கள் மருந்துவமனைையில் இருந்துதான் செல்ல வேண்டுமென்று மருந்துவமனைையில் சாெல்ல, அங்கேயே ஓய்வெடுக்கிறாள் சாந்தி. ஐந்து நாட்களுக்குப் பின், மருத்துவமனையிலிருந்த குழந்தை காணாமல் பாேகிறது. எல்லா இடமும் தேடுகிறார்கள். குழந்தை கிடைக்கவில்லை.

குழந்தையைத் தேடி பார்க்கிறார்கள்; எங்கும் கிடைக்கவில்லை. நெடுநாட்களாக குழந்தை இல்லாமல் இருந்ததால் அந்தக் குழந்தையைப் பார்த்ததும் குடும்பத்திற்கு ஒரு பூரிப்பு ஏற்பட்டது.

ஆனால் அந்த சந்தோஷம் நெடுந்தூரம் நிறக்கவில்லை; பிறந்த குழந்தை திருடு போனதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார்கள்.

ஆனால் அந்தக் குழந்தை எப்படி திருடு போய் இருக்கும்? என்பது அவர்களுக்குத் தெரியாது.

இருந்தாலும் குழந்தை காணாமல் போனது நிறையவே வருத்தம் இருக்கிறது. குழந்தையைக் கண்டுபிடிப்பதில் குமரவேலுக்கு முனைப்பு ஏற்படுகிறது.

சாந்திக்கு குழந்தை அதுவும் பிறந்ததும் இப்படி தவறிவிட்டதே? என்று நினைக்கும் போது அவர்கள் குடும்பத்திற்கும் பயம் தொற்றிக் கொள்கிறது.

பிரசவம் பார்த்த மருத்துவமனையில் கூட இதுபற்றி எதுவும் சொல்லாதது தான் ஏதோ புகார் கொடுத்து இருக்கிறோம்; குழந்தை வந்து சேரும் என்று ஒரு பொய் வாக்குறுதி கொடுக்கிறார்கள்.

ஆனால் குழந்தை தங்கள் கைகளுக்கு வந்து சேரும் என்று அவர்கள் கனவிலும் நினைக்கவில்லை. போனது போனதுதான் என்று நினைக்கிறான் குமரன்.

அதேசமயம் காவல் நிலையத்திலும் புகார் கொடுக்கப்படுகிறது. குழந்தையை எப்படியும் கண்டுபிடித்து விடுவோம். கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளிக்கிறார்கள் காவல்துறையினர்.

நாட்கள்தான் கடந்து கொண்டிருக்கிறது தவிர குழந்தைக்கு வந்தபாடில்லை. மார்பில் கட்டிய பாலை குழந்தைக்கு ஊட்டாததால் இரண்டு மார்பகங்களும் வீங்கி வெடித்து விடும் அளவிற்கு வலி ஏற்படுகிறது.

வேறு வழியில்லாமல் தினந்தோறும் தன்னுடைய தாய் பாலைப் பீச்சி பீச்சி கீழே விடுகிறாள்.

அது அவளுக்கு ஏதோ ஒரு தவறு செய்வது போல இருக்கிறது. என்ன செய்யலாம்? எப்படி செய்யலாம்? என்று யோசித்துக் கொண்டிருக்கிறாள் சாந்தி.

தினமும் இப்படியே செய்து கொண்டு இருப்பது அவளுக்கு வருத்தத்தை ஏற்படுத்துகிறது.

பக்கத்து வீட்டில் இருக்கும் ஒரு தாயில்லாத குழந்தைக்கு அம்மாவாகிறாள். அந்தக் குழந்தையின் தாய் பிறந்ததும் இறந்து விடுகிறாள்.

ஒரு கட்டத்தில் தினமும் கீழே பீச்சி வெளியே தள்ளி கொண்டு இருந்தவள் ஒரு நாள் தன்னுடைய தாய்ப்பாலின் அருமை பெருமையை கருதி தாய் இல்லாத அந்த குழந்தைக்கு தினமும் தாய்ப்பால் ஊட்டி விடுவது என்று முடிவு செய்து தினமும் பால் ஊட்டுகிறாள்.

அவளுக்கு அவ்வளவு சந்தோஷம். காணாமல் போன தன் குழந்தை திரும்பி கிடைத்துவிடாதா? என்று ஏங்கிக் கொண்டிருந்தவருக்கு இந்தக் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பது பெரிய தவமாக நினைக்கிறாள்.

நாட்கள் நகர்கின்றன. தாய்ப்பால் குடித்த குழந்தை அழகாக துள்ளி விளையாடுகிறது.

ஒருநாள் இருநாள் என்று குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுப்பதைப் பார்த்துக் கொண்டிருந்த தகப்பன் உண்மையைச் சொல்லிவிட வேண்டும் என்று முடிவெடுக்கிறார்.

அன்று ஒரு நாள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டிருக்கும் போது, அம்மா நான்தான் தவறு செய்தேன். இந்தக் குழந்தை உங்களோடது தான் குழந்தையே பிறக்காத என்னுடைய மனைவிக்கு குழந்தை பிறந்ததை சொல்லி உங்க குழந்தை தூக்கிட்டு வந்துட்டாேம்.

கடவுள் எவ்வளவு பெரியவன் பாத்தீங்களா? திருடிட்டு வந்த குழந்தைக்கு என்னுடைய மனைவி பால் கொடுக்க முடியாமல் செத்துட்டா.

ஆனா உங்ககிட்ட இருந்து தூக்கி வந்த குழந்தைக்கு நீங்களே பால் கொடுக்கிறீங்க.

கடைசியா பாருங்க. கடவுள் என்னோட மனைவியே எடுத்துக்கிட்டான். உங்களுடைய குழந்தை உங்க கிட்டே வந்துருச்சு. இதுதான் விதி.

நீங்க தாராளமா இந்த குழந்தை வீட்டுக்கு எடுத்துட்டு போகலாம் என்ற போது, சாந்தியின் கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்தது.

Leave a Reply

Your email address will not be published.