செய்திகள்

தாய்ப்பால் பெருக்கும் ஆமணக்கு இலை


நல்வாழ்வு சிந்தனைகள்


ஆமணக்கு இலைகள், வேர், விதை, எண்ணெய் ஆகியவை பொதுவாகக் கசப்புச்சுவையும் வெப்பத் தன்மையும் கொண்டவை. இலை வீக்கம் கட்டி, வாதம் ஆகியவற்றைக் கரைக்கும். தாய்ப்பால் பெருக்கும்.கை வடிவமான பெரிய மடல் போன்ற இலைகளை மாற்றடுக்கில் கொண்ட, சாம்பல் நிறமான பூச்சுடைய, 10 அடி வரை உயரமாக வளரக்கூடிய தாவரம்.இலைகள் மிகப் பெரியதாகவும் அகன்றும் மேற்பகுதி வட்டமாகவும் தாவரத்தின் நுனியில் பெரிய கொத்தாகவும் காணப்படும். எளிதில் உடையக்கூடிய தண்டுக் கட்டையைக் கொண்டது. முட்களுடன் கூடிய காய்ந்தால் வெடிக்கக்கூடிய காய்களை உடையது. பழங்கள் கூர்மையான 6 பிரிவாகப் பிரிக்கப்பட்டவை.விதைகள் நீள்வட்டமானவை. ஏரண்டம், சித்திரம், தலரூபம் ஆகிய மாற்றுப் பெயர்களும் ஆமணக்கிற்கு உண்டு. விதைக்கு முத்துக்கொட்டை என்கிற பெயரும் உண்டு.

ஆமணக்கு வேர் வாதநோய்களைக் குணமாக்கும். விதைகள் வயிற்றுவலி, சிறுநீர் அடைப்பு, வீக்கம் ஆகியவற்றைப் போக்கும். ஆமணக்கு எண்ணெய் மலமிளக்கும்; வறட்சியகற்றும்.பச்சிளம் குழந்தைகளைத் தாய்போல வளர்க்கும் பண்பினை ஆமணக்கு எண்ணெய் கொண்டுள்ளதாக நமது முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஆமணக்கு பெருஞ்செடிகளாகவோ அல்லது குறுமரங்களாகவோ வளரும் இயல்புடையது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *