செய்திகள்

தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும் முருங்கைக் கீரை

முருங்கைக் கீரை இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் நல்ல ரத்தம் ஊறும்; பற்கள் பலப்படும்; முடி நீண்டு வளரும்; நரை முடி ஏற்படுவது குறையும்; தோல் வியாதிகள் நீங்கும்.

முருங்கைக் கீரையை வாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது உணவுடன் எடுத்துக் கொண்டால் ரத்தமும் சிறுநீரும் சுத்தம் அடையும்.

முருங்கைக் கீரையை சூப் போல செய்து சாப்பிட்டால் மூட்டு வலி பறந்து போய்விடும்.

முருங்கைக் கீரையானது கர்ப்பப் பையின் குறைகளைப் போக்கி கருத்தரிப்பதை ஊக்குவித்து பிரசவத்தை விரைவுபடுத்தும். முருங்கை கீரையைக் கொண்டு தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிட்டால் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும்.

முருங்கைக் கீரை சூப்பானது ஆஸ்துமா, மார்பு சளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு நல்லது. முருங்கைக் கீரையானது ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையைப் போக்கும் வல்லமை வாய்ந்தது. மேலும் ரத்த விருத்திக்கும் நல்ல உணவு.

Leave a Reply

Your email address will not be published.