வாழ்வியல்

தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையான தேங்காய்ப்பால்

தேங்காயின் மருத்துவப் பயன்கள் மலைக்க வைக்கும் . தேங்காய் நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கும்.

தேங்காயில் உள்ள பேட்டி ஆசிட் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கிறது. உடல் எடையைக் குறைக்கிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையான சத்து தேங்காயில் இருக்கிறது. இளநீரில் உள்ள சத்தும் தாய்ப்பாலில் உள்ள புரதச் சத்துக்கு இணையானது .

தேங்காய் அல்லது தேங்காய்ப்பபூ மென்று தின்றால் வாய் வயிறு வெந்திருந்தால்

அது சரியாகிவிடும். தேங்காய்ப்பால் சாதம் , தேங்காய்ப்பால் ஆப்பம் சாப்பிட்டால் ரத்தக் குழாய்களிலும் எலும்பிலும் ஏற்பட்ட உள் காயங்கள் ஆறிவிடும் .

உணவில் தேங்காய் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்த அணுக்களில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியின் அளவும் ஆற்றலும் அதிகரிக்கும்.

உணவில் தேங்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தோல், எலும்பு நோய்கள் குணமாகிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *