செய்திகள் நாடும் நடப்பும்

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து 3-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

Makkal Kural Official

மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாத தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து 3-ந் தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்


சென்னை, ஆக.31-

தாம்பரம் மாநகராட்சியை கண்டித்து வருகிற 3-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது .


தேதி : 30.8.2024

தலைமைக் கழக அறிவிப்பு

கழகப் பொதுச் செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் புரட்சித் தமிழர்’ திரு. எடப்பாடி மு. பழனிசாமி அவர்களின் முக்கிய அறிவிப்பு

தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-க்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தராததோடு; மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களை

அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயலிழக்கச் செய்து வரும் திமுக அரசு

மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ! 3.9.2024 செவ்வாய் கிழமை

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-க்கு உட்பட்ட சிட்லபாக்கம்-செம்பாக்கம் பகுதியில் கீழ்க்கண்ட அத்தியாவசியத் தேவைகள் நிறைவேற்றப்படாத காரணத்தால் அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமத்துடன் வாழ்ந்து வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன் விபரம் வருமாறு :

செம்பாக்கம், ராஜகீழ்பாக்கம், கௌரிவாக்கம் ஆகிய இடங்களில்;

* கழக ஆட்சியில், பொதுமக்கள் நலன் கருதி 8100 குடியிருப்புகளுக்கான குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு ஆணையிடப்பட்டு, அதில் 3000 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பும் வழங்கப்பட்டது. துரதிருஷ்டவசமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்ட நிலையில், மீதமுள்ள 5100 குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கப்படாத காரணத்தால் பொதுமக்கள் குறிப்பாக தாய்மார்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இங்கு, 17 பூங்காக்கள் கழக ஆட்சியில் முறையாக பராமரிக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வந்தன. தற்போது அனைத்து பூங்காக்களும் உரிய பராமரிப்பின்றி பாழ்பட்டுள்ளது. இங்கு மின் விளக்குகள் சரிவர எரியாத காரணத்தால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி உள்ளது.

* கழக ஆட்சியில், இங்குள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 15 இடங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. இப்பணிகளை மேற்கொள்வதற்காக ஆட்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு சம்பளம் வழங்கப்பட்டு முறையாக பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போதைய திமுக ஆட்சியில் உரிய பராமரிப்பு இல்லாததோடு, இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்கப்படுவதில்லை. இதன் காரணமாக

மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

* கழக ஆட்சியில், இங்குள்ள ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், பல இடங்களில் மினி சின்டெக்ஸ் டேங்குகள் அமைக்கப்பட்டு அதன் மூலமும் தடையின்றி குடிநீர் வழங்கப்பட்டு வந்தன. தற்போதைய திமுக ஆட்சியில் பெரும்பாலானவை பராமரிப்பின்றி பாழ்பட்டு சுகாதாரமற்ற நிலையில் உள்ளன.

* இங்குள்ள அம்மா உணவகங்களில், கழக ஆட்சியின்போது நாள்தோறும்

மூன்று வேளையும் 300-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வயிறார உணவருந்தி பயன்பெற்று வந்தனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, தற்போதைய விடியா திமுக ஆட்சியில் போதுமான மளிகைப் பொருட்கள் வழங்கப்படாத காரணத்தால் குறைவான மக்களே உணவருந்தி வரும் அவல நிலை உள்ளது.

* மண்டலம் – 3க்கு உட்பட்ட இடங்களில் ஒருங்கிணைந்த பாதாள சாக்கடைத் திட்டத்தினை அமல்படுத்தி விரைந்து முடித்திட அப்பகுதிவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

* குடிநீர் இணைப்பு பெறாதவர்களுக்குக் கூட குடிநீர் கட்டணத்தை உயர்த்தி உடனடியாக செலுத்துமாறு இப்பகுதிவாழ் மக்களின் கைபேசிகளுக்கு குறுந்தகவல் அனுப்பப்பட்டு வரும் அவல நிலை உள்ளதாக மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

மக்கள் நலனில் கிஞ்சிற்றும் அக்கறை இல்லாத விடியா திமுக அரசுக்கும், தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்திற்கும் எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சி, மண்டலம் 3-க்கு உட்பட்ட இடங்களில் வாழும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தராததோடு;

மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு செயலிழக்கச் செய்து வரும் திமுக அரசு

மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு மேற்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், 3.9.2024

செவ்வாய் கிழமை மாலை 4 மணியளவில், செம்பாக்கம் காமராஜபுரம் பஸ் நிலையம் அருகில்’’ மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், அ.தி.மு.க. மகளிர் அணிச் செயலாளரும், கட்சியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா.வளர்மதி தலைமையிலும்; செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ச.ராஜேந்திரன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்றத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான டி.கே.எம்.சின்னையா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த

கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும்,

கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

விடியா திமுக அரசு மற்றும் தாம்பரம் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து

நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், தொழிலாளர்கள்

உள்ளிட்ட பொதுமக்கள் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

எடப்பாடி மு. பழனிசாமி

கழகப் பொதுச் செயலாளர்

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர்

தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர்

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *