செய்திகள்

தாம்பரத்தில் 3 பள்ளி ஆசிரியர்கள், கும்பகோணத்தில் 7 மாணவர்களுக்கு கொரோனா

சென்னை, மார்ச் 18–

தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் மக்களின் அலட்சியப்போக்கு மற்றும் முகக்கவசம் அணியாமல் இருப்பது, கொரோனா விதிகளை பின்பற்றாமல் இருப்பது போன்றவற்றால் தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. தற்போது பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

தஞ்சாவூர் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் மாணவிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என 68க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் ஒரு மாணவிக்கும், 2 பெற்றோர்களுக்கும் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனையடுத்து மற்ற பள்ளிகளிலும் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தஞ்சாவூர் மகர் நோன்பு சாவடியிலுள்ள தனியார் பள்ளியில் 2 ஆசிரியர்களுக்கு தொற்று உறுதியானது. தாம்பரத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு பெண் ஆசிரியை உட்பட 3 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை அடுத்து பள்ளி மூடப்பட்டது.

கும்பகோணத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 7 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *