செய்திகள்

தான் பயின்ற துவக்கப்பள்ளிக்கு ரூ.20 லட்சம் நன்கொடை அளித்த பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா

மதுரை, ஜூலை 14–

தான் பயின்ற துவக்கப் பள்ளியின் வளர்ச்சிக்காக ரூ.20 லட்சம் நிதி உதவி அளித்த சாலமன் பாப்பையாவுக்கு சு.வெங்கடேசன் எம்.பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பட்டிமன்றங்கள் மூலமாக பிரபலமானாவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா. இவர் மதுரை ஆரப்பாளையம் கிராஸ் சாலையில் உள்ள வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளியில் கடந்த 1941 ஆம் ஆண்டு முதல் 1945 ஆம் ஆண்டு வரை 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பயின்றார். தற்போது இந்த பள்ளி பெண்கள் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

ரூ.20 லட்சம் நன்கொடை

இந்நிலையில் தமிழ்நாடு அரசு அறிவித்த நமக்கு நாமே திட்டத்தின் கீழ் வகுப்பறை கட்டும் பணிக்காக 20 லட்ச ரூபாய்க்கான காசோலையை மதுரை மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமாரிடம் அவர் வழங்கி உள்ளார். இதனை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், குறிப்பிட்டதாவது:– ‘தனக்குப் பயன்தந்து இன்பமூட்டிய கல்வியை வழங்கிய வெள்ளிவீதியார் மாநகராட்சி பள்ளி இன்னும் பல்லாண்டுகள் நீடித்து நின்று பலருக்கும் கல்விப் பயனை நல்க வேண்டும் என்று விழைந்து, அப்பள்ளிக்கு 20 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ள தமிழறிஞர் ஐயா சாலமன் பாப்பையாவிற்கு நன்றியும் பாராட்டுகளும் என்று தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *