வாழ்வியல்

தானோட்டி வாகனங்கள் மூலம் ஆளில்லாமல் பீட்சா டெலிவரி!

Spread the love

தானோட்டி சரக்குப் பெட்டிகளுக்கு அவசர தேவை இருப்பதாக கருத்துகிறது,’நியூரோ!’ ஆட்களை பயன்படுத்தாமல், தங்கள், ‘பிட்சா’வை வாடிக்கையாளரின் முகவரிக்கே டெலிவரி செய்ய முடியுமா என்று பல பரிசோதனை செய்து வருகின்றனர், டோமினோஸ் பிட்சாவின் அதிகாரிகள்.

இந்த தேவையை, குட்டி சைசில் இருக்கும் நியூரோவின், ‘ஆர்ட்டூ’ என்ற தானோட்டி சரக்குப் பெட்டிகளால் கச்சிதமாக செய்ய முடியும். ஏனெனில், உணவு, மளிகை பொருட்களை தானே எடுத்துச் சென்று தரும் வாகனங்கள மட்டுமே தயாரிக்கிறது நியூரோ.

சமீபத்தில், அமெரிக்காவின், ஹியூஸ்டன் நகரில், சில டோமினோஸ் கடைகளிலிருந்து ஆர்ட்டூ தானோட்டி பெட்டிகள், பிட்சாக்களை டெலிவரி செய்ய ஆரம்பித்து உள்ளன. வாடிக்கையாளர் ஒரு மொபைல் செயலி மூலம் ஆர்டர் செய்தால், அவரது முகவரி பதித்த பெட்டியை சுமந்து, ஆர்ட்டூ சரக்குப் பெட்டி தானே கொண்டு போய், வீட்டின் முன் நின்று கொள்கிறது.

வாடிக்கையாளர் வந்து, தன் செயலியை சொடுக்கினால், பெட்டியின் கதவு திறக்கும். தனக்கான பிட்சாவை எடுத்ததும் கிளம்பி, அடுத்த ஆர்டரை டெலிவரி செய்ய கிளம்பி விடுகிறது ஆர்ட்டூ.

பாதுகாப்பாக, அதிக எடையுள்ள பொருட்களை வேகமாக கொண்டு செல்ல, ஆர்ட்டூ போன்ற தீர்வு தான் சரியானது என, நியூரோ அதிகாரிகள் சொல்கின்றனர். வாடிக்கையாளர்களும் அப்படி நினைத்தால், விரைவில் சாலைகளில், ஆர்ட்டூ சரக்கு வண்டிகளில் டோமினோஸ் பிட்சா மணக்க ஆரம்பித்துவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *