சென்னை, பிப் 5–
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, வண்டலூரை அடுத்த ரத்தினமங்கலம் தாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் விழிப்புணர் பேரணி நடைபெற்றது.
வண்டலூர் – கேளம்பாக்கம் சாயைில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்ற மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் புகைப்பழக்கத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
பேரணி நிறைவில் கல்லூரி முதல்வர் ஜெ. முத்துக்குமரன் பேசுகையில், ‘புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிப்பதன் மூலம் குணமாக்க முடியும். தற்போது இந்நோய் பாதிப்புக்குள்ளாவதற்கு முன்பே கண்டறியும் மருத்துவ பரிசோதனை வசதி உள்ளது என்றார்.
இது குறித்து பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. இந்த விழிப்புணர்வை மருத்துவமனைக்கு வருகை தரும் பெண்கள் மத்தியில் உருவாக்க மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி இயக்குனர் ஆர்.சாந்திமலர், துணை முதல்வர் டி.எச்.கோபாலன் ஆகியோர் பங்கேற்றனர்.