செய்திகள்

தவசி லிங்கசுவாமி கோயில் பணியாளர்களுக்கு 600 கிலோ அரிசி: அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

விருதுநகர் அருகே உள்ள

தவசி லிங்கசுவாமி கோயில் பணியாளர்களுக்கு 600 கிலோ அரிசி:

அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வழங்கினார்

 

விருதுநகர், மே.9–

விருதுநகர் அருகே பழமை வாய்ந்த தவசி லிங்க சுவாமி கோயில் பணியாளர்களுக்கு 600 கிலோ அரிசியை பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட கழகம் சார்பாக மாவட்டம் முழுவதிலும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி நிவாரண பொருட்களை நேரடியாக சென்று பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றார். அது போல் இந்து, கிறிஸ்துவ, இஸ்லாமிய மதம் உட்பட அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அரிசி பைகளை வழங்கினார். இந்த நிலையில் விருதுநகர் அருகே மூலிபட்டியில் மூலிப்பட்டி ஜமீனுக்கு சொந்தமானதும் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜியின் குலதெய்வக் கோயிலுமான மிகவும் பழமை வாய்ந்த தவசி லிங்கம் சுவாமி திருக்கோயில் பூசாரிகள், கோயில் பணியாளர்களுக்கு 600. கிலோ அரிசி பைகளை அமைச்சர் வழங்கினார்.

நிகழ்ச்சியில் மூலிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி ராஜா, தவச லிங்கசுவாமி திருக்கோயில் தலைவர் செல்லசாமி, விருதுநகர் ஒன்றிய அதிமுக செயலாளரும் கோயில் செயலாளருமான தர்மலிங்கம், கோயில் பொருளாளர் கணியப்பன், அண்ணா தி.மு.க. ஒன்றிய கழக துணைச் செயலாளர் சின்னசாமி, மாவட்ட கழக அவைத் தலைவர் விஜயகுமார் சிவகாசி ஒன்றிய கழக செயலாளர் புதுப்பட்டி கருப்பசாமி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் சரவணன், கோயில் நிர்வாகி அழகர்சாமி, சிற்பி கருப்பசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *