செய்திகள்

தலைமை ஆசிரியை சசிகலா ஸ்ரீராமிற்கு சென்னை மித்ரா ரோட்டரி சாதனை விருது

32 ஆண்டு அனுபவசாலி; பெசன்ட் நகர் இலவச பள்ளியை மேம்படுத்திய

தலைமை ஆசிரியை சசிகலா ஸ்ரீராமிற்கு சென்னை மித்ரா ரோட்டரி சாதனை விருது

அபிராமி ராமநாதன் வழங்கினார்

சென்னை, செப். 16

சென்னை மித்ரா ரோட்டரி கிளப் சாதனையாளர் விருதை கல்வியாளர் சசிகலா ஸ்ரீராமிற்கு, ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் அபிராமி ராமநாதன் வழங்கினார். செயலாளர் பிரவீன், தலைவர் சுரேஷ், ஸ்ரீனிவாசன், என்.எஸ்.சரவணன், ஸ்ரீனிவாசன் பலராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்த சென்னையை சேர்ந்தவர்களுக்கு மாதந்தோறும் சென்னை மித்ரா ரோட்டரி கிளப் விருதுகளை வழங்கி பாராட்டி வருகிறது.

சசிகலா ஸ்ரீராம் தற்போது ஆல்காட் நினைவு பள்ளியில் கவுரவ டைரக்டராக பணிபுரிகிறார். பெசன்ட் நகர் இலவச பள்ளியை நிர்வகித்து மேம்படுத்தி உள்ளார்.

கல்வி துறையில் 32 வருட அனுபவம் பெற்ற சசிகலா ஸ்ரீராம், பல கல்வி நிறுவனங்களில் முதல்வராகவும், கல்வி இயக்குனராகவும் பணி புரிந்துள்ளார்.

“ரோட்டரி வாய்ப்புகளைத் திறக்கிறது” என்ற கருப்பொருளின் அடிப்படையில் சென்று, கொரோனா காலத்தில் மனிதகுலத்திற்கு ஆற்றிய மகத்தான சேவைக்காக ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற வீரர்களை சாதனைலாளர்களை பாராட்டி விருது வழங்க சென்னை மித்ரா ரோட்டரி கிளப் திட்டமிட்டுள்ளது

“இந்தவிருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட வர் அவர்கள் செயல்படும் துறையில் அவர்களின் செயல்களுக்காக இதுபோன்ற சாதனையாளர்களை கவுரவிக்கிறோம்.

பொறுப்புள்ள ரோட்டரி கிளப்பாக அத்தகைய நபர்களை அடையாளம் கண்டு பாராட்டி விருது வழங்குகிறோம்’’ என்று சென்னை பிரிவு சேர்மன் என்.எஸ்.சரவணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *