செய்திகள் வாழ்வியல்

தலைமுடி உதிரும் பிரச்சனை, பொடுகுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சீகைக்காய்த்தூள்


நல்வாழ்வுச் சிந்தனைகள்


தலைமுடியைப் பராமரிக்க அக்காலத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வந்தது சீகைக்காயைத் தான். சீகைக்காயானது தலைமுடியின் அமைப்பை பாதுகாப்பதோடு, முடிக்கு நல்ல வலிமையையும் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. சொல்லப்போனால் பழங்காலத்தில் நம் முன்னோர்களின் தலைமுடி நன்கு ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது இந்த சீகைக்காய் தான். அதனால் தான் நம் பாட்டிமார்கள் தலைமுடிக்கு சீகைக்காயைப் போட்டு குளிக்க சொல்கிறார்கள்.

நீங்கள் நீண்ட நாட்களாக தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை, முடி உடைவது போன்ற தலைமுடி தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்தித்து வந்தால் சீகைக்காயைக் கொண்டு உங்கள் முடிக்கு பராமரிப்புக்களைக் கொடுங்கள். கீழே தலைமுடி பிரச்சனைகளுக்கு சீகைக்காயை எப்படியெல்லாம் பயன்படுத்த வேண்டும் என்பது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள். பொடுகு தொல்லைக்கு…

நீங்கள் பொடுகுத் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால், சீகைக்காயுடன் தயிர், வெந்தயம், நெல்லிக்காய், ஆலிவ் ஆயில் போன்றவற்றை சேர்த்து ஒரு தைலம் தயாரித்து பயன்படுத்துங்கள். அதற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் வெந்தய பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பொடி, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 கப் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி ஆகியவற்றை ஒன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி 2-3 மணிநேரம் ஊற வைக்க வேண்டும். பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும் .முடி உடைவதைத் தடுக்க…

உங்கள் தலைமுடி பலவீனமாக உள்ளதா? முடி அதிகம் உடைகிறதா? அப்படியானால் சீகைக்காயைப் பயன்படுத்துங்கள். அதற்கு 2 ஸ்பூன் சீகைக்காய் பொடியை ஒரு பௌலில் எடுத்து, அதில் ஒரு பெரிய டேபிள் ஸ்பூன் தயிரை சேர்த்து கலந்து, தலைமுடியின் வேரில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தினால், தலைமுடி நன்கு வலுவாகும். தலைமுடி உதிர்வைத் தடுக்க…

உங்களுக்கு தலைமுடி அதிகமாக உதிர்கிறதா? என்ன செய்தாலும் தலைமுடி உதிர்வது நிற்கவில்லையா? அப்படியானால் சீகைக்காய் ஹேர் பேக்கை பயன்படுத்துங்கள். அதற்கு சீகைக்காய் பொடியுடன், முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலந்து, அதை தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இந்த ஹேர் பேக் தலைமுடியை வலுவாக்குவதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

உங்கள் தலைமுடி பொலிவிழந்து அசிங்கமாக காணப்படுகிறதா? உங்கள் தலைமுடிக்கு நல்ல பொலிவு கிடைக்க வேண்டுமா? குறிப்பாக உங்கள் முடி வறண்டு உள்ளதா? அப்படியானால் சீகைக்காயை நீரில் கலந்து தலைமுடியில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்த முடி நன்கு பொலிவோடு மென்மையாக அழகாக இருக்கும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *