சினிமா செய்திகள்

தற்கொலை செய்து கொண்ட சுசாந்த் சிங் நடித்த ‘தில் பச்சரா’ படம் இணைய தளத்தில் வெளியீடு

தற்கொலை செய்து கொண்ட சுசாந்த் சிங் நடித்த ‘தில் பச்சரா’ படம் இணைய தளத்தில் வெளியீடு:

ஒரே நாளில் 9½ கோடி பேர் பார்த்தனர்

ஜாம்ஷெட்பூர் நகர பின்னணியில் கதை

சென்னை, ஆக. 8–

சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகர் சுசாந்த் சிங் நடித்த ‘தில் பச்சரா’ படம் டிஜிட்டல் தளத்தில் வெளியிடப்பட்டு ஒரே நாளில்

9 கோடியே 50 லட்சம் பேர் பார்த்து சாதனை படைத்துள்ளது.

ஜாம்ஷெட்பூர் நகரின் அழகு தோற்றம், பசுமை சூழல், தங்க நதி, டாடா ஸ்டீல் தொழிற்சாலை என பல பகுதிகள் இந்த படத்தில் காட்டப்பட்டுள்ளன.

ஆசியாவின் முதல் முழுவதும் சொந்த யந்திரங்களால் செயல்படும் டாடா ஸ்டீல் அனைவரையும் கவருகிறது என்று ஜாம்ஷெட்பூர் ரிஜீதா தேபெரா தெரிவித்தார்.

டாடா ஸ்டீல் தொழிற்சாலை புகைக் கோபுரங்கள் வெளியிடும் புகை, ஜாம்ஷெட்பூரின் இதயமாக செயல்படுகிறது. இத்துடன் ஜாம்ஷெட் நகரின் பசுமை ஏரிகள், சிவப்பு கட்டிடமான கிளப் ஹவுஸ், ஊழியர் வீட்டுவசதி காலனிகள் மார்க்கெட் கூட்டம் போன்றவை பரபரப்பு தோற்றம் அளிக்கிறது.

‘தில் பச்சரா’ இந்தி திரைப் படத்தில் ‘தா ஜின்’ பாடலில் இந்த நகர் அழகாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

ஜாம்ஷெட்பூர் ஏற்கனவே ‘உடான்’ இந்தி திரைப் படத்தில் இதன் எழில் தோற்றம் விளக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *