செய்திகள்

‘தற்காப்புக் கலை’யில் உலக சாதனை படைத்த புதுச்சேரி இரட்டையர்கள் விசாகன்–ஸ்ரீஹரிணிக்கு பாராட்டு

Spread the love

சென்னை, செப். 12

காரைக்கால் குட்ஷெப்பட் மேல்நிலை பள்ளியில் 5ம் வகுப்பு பயிலும் இரட்டையர்கள் கே.ஸ்ரீ விசாகன் (வயது 9), கே. ஸ்ரீஹரிணி (வயது 9).

புதுச்சேரி காரைக்காலில் உள்ள இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர் மகாகுரு வி.ஆர்.எஸ் குமாரிடம் 3 வயது முதல் கராத்தே, சிலம்பம், யோகா, கிக் பாக்ஸிங், குபுடோ, தேக்வாண்டோ போன்ற எண்ணற்ற தற்காப்பு கலைகளை கற்றவர்கள். இந்தியா மற்றும் சர்வதேச அளவில் 200க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கி புதுச்சேரி கவர்னர், முதல்வர் மற்றும் பல்வேறு தரப்பினரிடமும் பாராட்டை பெற்றவர்கள்.

இவர்களின் சாதனையை சிறப்பிக்கும் விதமாக பள்ளியின் சார்பாக தயார் செய்யப்பட்ட புத்தகத்தை சமீபத்தில் புதுச்சேரி துணை நிலை கவர்னர் கிரண் பேடி வெளியிட்டார்.

இவர்களின் சாதனையை அறிந்த வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் என்ற அமைப்பு இவர்கள் வாங்கிய சான்றிதழ்களை ஆய்வு செய்து உலகிலேயே முதன் முதலாக ஒரே நேரத்தில் சகோதர சகோதரியாக பிறந்த இரட்டையர்கள் 6 வயது முதல் 9 வயது வரை கராத்தேவில் 2 பிளாக் பெல்ட் மற்றும் இந்தியா மற்றும் சர்வதேச அளவில் அதிக பதக்கங்களை வாங்கி உலகச் சாதனை செய்ததை கண்டறிந்தனர்.

இந்நிலையில் வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் அண்ட் ரிசர்ச் பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் கலைவாணி மற்றும் முதன்மைச் செயலாளர் தஹ்மிதா, ஒருங்கிணைப்பாளர் ரியாஸ்தீன் ஆகியோர் இந்த இரட்டையர்களுக்கு வில் மெடல் ஆப் வேர்ல்டு ரெக்கார்டர்ஸ் மற்றும் வில் மெடல் கிட்ஸ் ரெக்கார்டர்ஸ் ஆகியவற்றில் உலக சாதனையை பதிவு செய்து சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். இவ்விழாவில் சாதனை இரட்டையர்களின் மாஸ்டர் வி.ஆர்.எஸ் குமார், பெற்றோர் மற்றும் பலர் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *