செய்திகள்

தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை

சென்னை, பிப்.28

தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் நேற்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை.

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52 ஆயிரத்து 628 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 257 ஆண்கள், 205 பெண்கள் என மொத்தம் 486 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 187 பேரும், கோவையில் 40 பேரும், செங்கல்பட்டில் 36 பேரும், திருவள்ளூரில் 35 பேரும், குறைந்தபட்சமாக அரியலூர், தர்மபுரி, பெரம்பலூர், தேனி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். 26 மாவட்டங்களில் 10-க்கும் குறைவானவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தர்மபுரி, கள்ளக்குறிச்சியில் நேற்று ஒருவர் கூட பாதிக்கப்படவில்லை. தமிழகத்தில் இதுவரை 8 லட்சத்து 51 ஆயிரத்து 63 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 3 பேரும், தனியார் மருத்துவமனையில் 2 பேரும் என 5 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர். இதுவரையில் 12,493 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 491 பேர் நேற்று பூரண குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரையில் தமிழகத்தில் 8 லட்சத்து 34 ஆயிரத்து 534 பேர் கொரோனாவில் இருந்து பூரண குணம் அடைந்து உள்ளனர். தற்போது சிகிச்சையில் 4 ஆயிரத்து 36 பேர் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *