செய்திகள்

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்

தருமபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் ‘அம்மா–இ’- கிராமத் திட்ட அலுவலகம்
அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்

தருமபுரி, மே 26

பெரியாம்பட்டியில் ‘அம்மா இ’- கிராமத் திட்ட அலுவலகத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்தார்.

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம், பெரியாம்பட்டியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அம்மா இ -கிராமத் திட்ட அலுவலகத்தை அமைச்சர் கே.பி.அன்பழகன் திறந்து வைத்து தெரிவித்ததாவது:

தமிழ்நாட்டில் மொத்தம் 6 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி, தருமபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியாம்பட்டி கிராமத்தில் அம்மா இ -கிராமம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அம்மா இ- கிராம திட்டத்தின் மூலம், டெலி மெடிசன், இருப்பிட சான்று, சாதி சான்று, இளைஞர் திறன் பயிற்சி, வங்கி சேவை, பட்டா சிட்டா இணையதள வழியாக மின்வாரிய கட்டணம் செலுத்துதல், இ -டிக்கெட் புக் செய்தல், இ- பணபரிமாற்றம், பிறப்பு இறப்பு சான்று, ஆதார் பிரிண்ட் போன்ற பல வகையான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்காக இந்த அம்மா இ -கிராமம் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் கூறினார்.

அதனை தொடர்ந்து, ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டடம் கட்டும் பணியை அமைச்சர் கே.பி.அன்பழகன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார்.

விழாவில், கோவிந்தசாமி எம்எல்ஏ, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, தருமபுரி கூட்டுறவு ஒன்றிய துணைத்தலைவர் பொன்னுவேல், காரிமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி பெரியண்ணன், பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இயக்குனர் சிவப்பிரகாசம், ஒன்றியக்குழு துணைத் தலைவர் செல்வராஜ், வட்டாட்சியர் கலைச்செல்வி, வட்டார வளர்ச்சி அலுவலர் தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *