சினிமா

தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் 1490 தியேட்டர்களில் ரிலீசாகும் விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’

சென்னை, பிப்.3–

நாளை (4ந் தேதி) பிரமாண்ட வெளியீடாக பன்மொழிகளில் திரைக்கு வருகிறது விஷாலின் ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம். U/A சான்றிதழ் பெற்றுள்ள இப்படம் தமிழ் நாட்டில் 560க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், ஆந்திராவில் 750க்கு மேற்பட்ட திரையரங்குகளிலும், கன்னடத்தில் மிக பெரிய வளியீட்டாக 180 க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும், உலகமெங்கும் வெளியாகிறது.

விஷால் பிலிம் பேக்டரி சார்பில், விஷால் நடிப்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கியுள்ளது “வீரமே வாகை சூடும்”. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவனின் போராட்டத்தைக் களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் பாண்டியநாடு பட பாணியில் மாறுபட்ட நடிப்பில் மிரட்டியிருக்கிறார் விஷால். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் ஆக்சன் படமாக இப்படம் உருவாகியுள்ளது.

டிம்பிள் ஹயாதி அறிமுக நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, ஆர்என்ஆர் மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கேஎஸ்ஜி வெங்கடேஷ், மஹா காந்தி, மரியம் ஜார்ஜ் ‘பிளாக் ஷீப்’ தீப்தி நடிக்கிறார்கள்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு, என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு, எஸ்.எஸ். மூர்த்தி கலை இயக்கம், வாசுகி பாஸ்கர் உடை வடிவமைப்பு, ஒலி அமைப்பு தபஸ் நாயக், அனல் அரசு, ரவி வர்மா, தினேஷ் – சண்டை காட்சிகளை அமைக்கின்றனர். விளம்பர வடிவமைப்பு கண்ணதாசன், மக்கள் தொடர்பு பணிகளை ஜான்சன், பாலா கோபி எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர்.

Leave a Reply

Your email address will not be published.