சினிமா

தமிழ்ப்பட அதிபர்கள் சங்கம் என்னும் ரெயிலை ஓட்ட ‘பைலட்டை’ வைத்திருக்கிறோம்’

சென்னை, டிச. 27–

தமிழ்ப்பட அதிபர்கள் சங்கம் என்னும் ரெயிலை ஓட்ட (பெப்சியின் 24 சங்கங்கள் இணைந்தது) பைலட்டை (விஷால்) வைத்திருக்கும் கொடுமை நம்மிடம் தான் இருக்கிறது. இந்த நிலையை மாற்றியாக வேண்டும் என்று படத்தயாரிப்பாளர் டி.சிவா (அம்மா க்ரியேஷன்ஸ்) கிண்டலாகக் குறிப்பிட்டார்.

சங்கர் மூவிஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஜோசப் பேபி தயாரிக்கும் படத்திற்கு ‘என் காதலி சீன் போடறா’ என்று வித்தியாசமாக தலைப்பு வைத்துள்ளனர். அங்காடித்தெரு மகேஷ் நாயகன். ஷாலு நாயகி என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். இவர்களுடன் ஆடுகளம் நரேன், மனோபாலா, அஞ்சலி அம்மா, அம்பானி சங்கர், தியா, தென்னவன், வையாபுரி ஆகியோரும் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் விஜய் டிவி கோகுல் அவருக்கு தங்கையாக நிஷா நடித்துள்ளார்.

ஒளிப்பதிவு: வெங்கட், இசை : அம்ரிஷ், பாடல்கள்:ராம் சேவா, ஏகாதசி, கலை: சோலைஅன்பு, நடனம் : சிவாலாரன்ஸ், சாண்டி, ஸ்டண்ட்: மிரட்டல் செல்வா, எடிட்டிங்: மாரிஸ், தயாரிப்பு மேற்பார்வை: தண்டபாணி.

படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேப் அரங்கில் நேற்று மாலை நடந்தது. இதில் கே.பாக்யராஜ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று டிரெய்லரை வெளியிட்டார். விழாவில் படத்தயாரிப்பாளர் டி.சிவா, சக்தி சிதம்பரம் உள்ளிட்ட கலையுலகப் பிரமுகர்கள் பலரும் பங்கேற்று வாழ்த்தினார்கள்.

விழாவில் மனோபாலா பேசுகையில், ‘இப்போல்லாம் வர்ற படங்கள்ல டைரக்டர்கள், என்னை வெண்ணிற ஆடை மூர்த்தி ரேஞ்ஜுக்குத் தள்ள ஆரம்பிச்சுட்டாங்க (டபுள் மீனிங்ல் பேச வைச்சு). இதை ஆரம்பிச்சு வெச்சவரே டைரக்டர் ராதா மோகன் தான்’ என்று தமாஷாகக் குறிப்பிட்டார்.

23 நாட்களில் படம் பிடித்த குறுகிய கால அனுபவத்தில் தயாரிப்பில் கசப்பான அனுபவங்களை வேதனையுடன் வெளியிட்டார் அறிமுக இயக்குனர் ராம் சேவா.

புற்றுநோய் மையத்துக்கு நன்கொடை

படம் வியாபாரமே ஆகாவிட்டாலும் நானே தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்வேன், ‘ஆடியோ வசூல் பணத்தை புற்றுநோய் சிகிச்சை மையத்துக்கு நன்கொடை வழங்குவேன், அடுத்தும் படம் எடுப்பேன் என்ற தயாரிப்பாளர் ஜோசப் பேபியின் உறுதியை இசையமைப்பாளர் அம்ரிஷ் பாராட்டினார். வந்திருந்தவர்களை மக்கள் தொடர்பாளர் ‘மவுனம்’ ரவி வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *