டெல்லி, மார்ச் 23–
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1300 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த மாத தொடக்கத்தில், தினசரி கொரோனா பாதிப்பு 200 க்கும் குறைவாக இருந்தது. ஆனால் கடந்த 3 வாரங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 1300 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
3 பேர் பலி
இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 99 ஆயிரத்து 418 ஆக அதிகரித்துள்ளது. நேற்று 662 பேர் நோய்த்தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 60 ஆயிரத்து 997 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 7605 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று கர்நாடகா, மகாராஷ்டிராக, குஜராத் மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5,30,816 ஆக உயர்ந்துள்ளது.
தமிழ்நாட்டில் 83 பேர்
அதேபோல் தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 83 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 480 உயர்ந்துள்ளது. புதிய உயிரிழப்புகள் இல்லாத நிலையில் மொத்தம் 38050 பேர் உயிரிழந்த நிலையில், குணமானவர்களின் எண்ணிக்கை 35 லட்சத்து 57,309 என மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.