செய்திகள்

தமிழ்நாட்டில் 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.11-

தமிழ்நாட்டில் தினசரி மொத்த கொரோனா பாதிப்பு 3 ஆயிரத்துக்கு கீழ் குறைந்தது.

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவை தலைகீழாக புரட்டிப்போட்ட நிலையில், கடந்த சில நாட்களாக மொத்த கொரோனா பாதிப்பு படிபடியாக குறைந்து கட்டுக்குள் வந்துக்கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று 2,913 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 16 மாவட்டங்களில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 49 ஆயிரத்து 305 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,672 ஆண்கள், 1,241 பெண்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 913 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 338 பேரும், ஈரோட்டில் 215 பேரும், சேலத்தில் 180 பேரும், சென்னையில் 174 பேரும், திருப்பூரில் 169 பேரும், தஞ்சாவூரில் 174 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் மட்டும் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 35 லட்சத்து 43 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 70 ஆயிரத்து 299 ஆண்களும், 10 லட்சத்து 45 ஆயிரத்து 674 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 25 லட்சத்து 16 ஆயிரத்து 11 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 43 பேரும், தனியார் மருத்துவமனையில் 6 பேரும் என 49 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் 22 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. 16 மாவட்டங்களில் ஒரு உயிரிழப்பு கூட இல்லை.

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 3,321 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 49 ஆயிரத்து 873 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 32 ஆயிரத்து 767 பேர் உள்ளனர்.

தமிழகத்தில் 74 ஆயிரத்து 713 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 3 ஆயிரத்து 615 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 57 ஆயிரத்து 91 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *