செய்திகள்

தமிழ்நாட்டில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

சென்னை, ஜூலை.20-

தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு புதிதாக கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. கொரோனாவுக்கு 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் கடந்த மார்ச் மாதம் 26ந்தேதி புதிதாக 2 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் 114 நாட்களுக்கு பின்னர் நேற்று புதிதாக கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுகிறவர்கள் எண்ணிக்கை மீண்டும் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

இதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று (திங்கட்கிழமை) புதிதாக 1 லட்சத்து 34 ஆயிரத்து 136 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 1,139 ஆண்கள், 832 பெண்கள் என மொத்தம் 1,971 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கோவையில் 209 பேரும், சென்னையில் 147 பேரும், ஈரோட்டில் 136 பேரும், சென்னையில் 147 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக ராமநாதபுரத்தில் 12 பேரும், பெரம்பலூரில் 10 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 48 லட்சத்து 29 ஆயிரத்து 174 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதில் 14 லட்சத்து 82 ஆயிரத்து 615 ஆண்களும், 10 லட்சத்து 54 ஆயிரத்து 720 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 25 லட்சத்து 37 ஆயிரத்து 373 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 92 ஆயிரத்து 484 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 65 ஆயிரத்து 640 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 20 பேரும், தனியார் மருத்துவமனையில் 8 பேரும் என 28 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை 33 ஆயிரத்து 752 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து 2,558 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதுவரையில் 24 லட்சத்து 76 ஆயிரத்து 339 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 27 ஆயிரத்து 282 பேர் உள்ளனர்.

தமிழ்நாட்டில் நேற்று 39 ஆயிரத்து 649 ஆக்சிஜன் படுக்கைகள், 25 ஆயிரத்து 912 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 7 ஆயிரத்து 467 ஐ.சி.யு. படுக்கைகள் என மொத்தம் 73 ஆயிரத்து 28 படுக்கைகள் மருத்துவமனைகளில் காலியாக உள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *