சென்னை, ஏப்.1-
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 139 பேர் கொரோனா பாதிப்பு அடைந்து உள்ளனர். இதில் 78 ஆண்கள் மற்றும் 61 பெண்கள் அடங்குவார்கள். அதிகபட்சமாக சென்னையில் 38 பேருக்கும், செங்கல்பட்டு, கோவையில் 14 பேருக்கும் தொற்று ஏற்பட்டு உள்ளது. மேலும் வெளிநாட்டு பயணி ஒருவர் உள்பட மொத்தம் 25 மாவட்டங்களில் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. அதே சமயத்தில் 13 மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படவில்லை.
தமிழகத்தில் கடந்த சில நாட்களை போன்று உயிரிழப்பு எதுவும் இல்லை.
மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.