செய்திகள்

தமிழ்நாட்டில் 12 இடங்கள் உள்பட 23 இடங்களில் என்ஐஏ சோதனை

சென்னை, அக். 12–

கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்களின் 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலத்தில் கடந்த வாரம் மாவோயிஸ்ட் காளிதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அவருக்கு தொடர்புடைய 23 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாட்டில் 12 இடங்கள்

தமிழ்நாட்டில் சிவகங்கை, கோவை, தேனி, கிருஷ்ணகிரி, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் 12 இடங்களில் என்.ஐ.ஏ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். கோவையில் மாவோயிஸ்ட் ஆதரவாளர்களாக அறியப்படும் புலியகுளம் பகுதியில் உள்ள மருத்துவர் தினேஷ் என்பவரது வீட்டிலும், சுங்கம் பகுதியிலுள்ள டேனிஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல பொள்ளாச்சி அடுத்த அங்கலங்குறிச்சி பகுதியிலுள்ள சந்தோஷ் என்பவரது வீட்டிலும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளின் சோதனையானது நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *