வாழ்வியல்

தமிழ்நாட்டில் வெள்ளாடு வளர்ப்புத் தொழில்–2

இனப்பெருக்க மேலாண்மை ஆடு, வளர்ப்பிலிருந்து கிடைக்கும் முக்கிய வருமானம் அவைகளிடமிருந்து கிடைக்கக் கூடிய குட்டிகளாகும். எனவே அதிக எண்ணிக்கையில், குட்டிகள் கிடைக்க நாம் பின்பற்ற வேண்டிய பராமரிப்பு முறைகள் பற்றி தெரிந்து கொள்வது மிகவும் அவசியம்.

முதலினச் சேர்க்கை செய்யும் வயது : பெண் ஆடுகள் சராசரியாக 6 மாத வயதிற்குள் பருவத்திற்கு வந்துவிடும். ஆனால், இந்த வயதில் கர்ப்பத்தை தாங்கிக் கொள்ளக்கூடிய முழு வளர்ச்சி பெற்றிருக்காது. மிகவும் இள வயதில் சினைதரிக்கும் ஆடுகளின் வளர்ச்சி, ஆரோக்கியம் பாதிக்கப்படும். குட்டிகள் ஈனுவதற்கு சிரமப்படும். மேலும் குட்டிகளுக்கு தேவையான பால் உற்பத்தியும் குறைந்துவிடும்.

எனவே, பெண் ஆடுகளை 1 வயது அடையும்போது தான் இனச்சேர்க்கைக்கு அனுமதிக்க வேண்டும். குட்டிகள் 4 மாத வயதையடைந்தவுடன், கிடாக்குட்டிகளையும் பெட்டைக் குட்டிகளையும் பிரித்து வளர்க்க வேண்டும். இவ்வாறு பிரித்து வளர்க்கவில்லை என்றால், இளம் வயதிலேயே இனச்சேர்க்கை ஏற்பட்டு சினைத் தரித்துவிடும்.

குட்டி ஈனும் இடைவெளி: ஆடுகளின் சினைக்காலம் 5 மாதங்கள். பெட்டை ஆடுகள் ஈன்ற பின் 3 மாதங்கள் கழித்து மீண்டும் இனச்சேர்க்கை செய்தால் 2 வருடத்தில் 3 ஈத்துகள் கிட்டும். அதாவது குட்டி ஈனும் இடைவெளி 8 மாதங்களுக்கு மிகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இனப்பெருக்க சிறப்பு தீவனம்

ஆடுகளை நல்லமுறையில் பராமரித்து, அவற்றிற்கு போதுமான தீவனம், இதமான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்தால், பெட்டை ஆடுகளின் பருவ சுழற்சி ஆண்டு முழுவதும் நடைபெறும். ஆனால் கோடைக் காலங்களில், ஆடுகள் வெப்ப அயர்ச்சிக்குட்படுத்துவதாலும், போதிய தீவனம் கிடைக்காததாலும், பருவ சுழற்சி நடைபெறுவதில்லை.

இனச்சேர்க்கை செய்வதற்கு 1 மாதத்திற்கு முன்பிலிருந்து, தினமும் ஆடு ஒன்றுக்கு 250 கிராம் வீதம் அடர் தீவனம் அல்லது சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற தானியங்களை கொடுத்து வந்தால், ஆடுகள் முறையாக பருவத்திற்கு வந்து அதிக எண்ணிக்கையில் கருமுட்டை வெளியாகி கருத்தரிப்பு விகிதம் அதிகரிக்கும்.

மேலும் பருவ சுழற்சி, பொலிவுக்கேற்ற நேரம், பொலிகிடா, தீவன மேலாண்மை, வெள்ளாடுகளின் தீவன பழக்கம், நோய்கள் என முழு தகவல்களையும் கெட்டில் முறை வளர்ப்பு, முதலீடு, மார்க்கெட்டிங், பயிற்சி, கடன் உதவி, பயிற்சி மைய விலாசங்களும் அறிந்திருக்க, ஆலோசனை பெற, அரசின் மானியம்/சலுகை பெற, கீழ்கண்ட வலைதளங்களை பாருங்கள்:–

www.goatfarming.in, www.agricultural information.com, www.deadf.gov.in/tsites/guidelines, www.tn.gov.in/animal husbandry, www.tanuvas.gov.in, www.natural.org, www.tnau.ac.in, www.manage.gov.in/treanings/trgcalender.pdf, www.reseti.gov.in, www.dea.gov.in/farmers, www.seribd.com/goat farming project report, www.roysfarm.com, www.expert–market.com>farming business, www.academia.edu/project Report, www.icar.res.in, www. downloadproject report.com/goat farming.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *