சென்னை, ஆக.15–
தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது, நமது திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:–
திருப்பூர் மாவட்டம் நஞ்சராயன் பறவைகள் காப்பகம் மற்றும் விழுப்புரம் மாவட்டம் கழுவேலி பறவைகள் காப்பகம் ஆகியவற்றுடன் சேர்த்து தமிழ்நாட்டில் உள்ள ராம்சர் தலங்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது.
இந்தத்தொடர் சாதனை தமிழ்நாடு வனத்துறையின் அர்ப்பணிப்பு மிகுந்த முயற்சிகளையும், நமது திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் சுற்றுச்சூழலைக் காப்பதில் கொண்டுள்ள உறுதிப்பாட்டையும் வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.