செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 2 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூலை 18–-

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கமாக பதிவாகி வருகிறது. சில நேரங்களில் தொற்று பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகி வருகிறது. அந்தவகையில், நேற்று மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஆண் ஒருவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து தமிழகம் வந்த ஆண் பயணி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதைபோல, மற்ற 37 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. கொரோனா பாதிப்பில் இருந்து ஒருவர் குணமடைந்து வீடு திரும்பினார். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. இதைபோல, தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இந்த தகவலை மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *