செய்திகள்

தமிழ்நாட்டில் புதிதாக 10 பேருக்கு கொரோனா

சென்னை, ஜூன் 17–-

தமிழ்நாட்டில் நேற்று 10 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில், சிங்கப்பூர் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்த தலா 2 பேர், ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து வந்த ஒருவர் என 5 வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

இதுபோக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 3 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதற்கு அடுத்தபடியாக, காஞ்சீபுரம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 9 பேர் ஆண்கள், ஒருவர் பெண் ஆவார். சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 31 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *