செய்திகள்

தமிழ்நாட்டில் நேற்று 744 பேருக்கு தொற்று உறுதி

சென்னை, நவ.25-

தமிழ்நாட்டில் நேற்று 744 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 1 லட்சத்து 1,363 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 438 ஆண்கள், 306 பெண்கள் என மொத்தம் 744 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதில் அதிகபட்சமாக சென்னையில் 115 பேரும், கோவையில் 117 பேரும், செங்கல்பட்டில் 59 பேரும், ஈரோட்டில் 81 பேரும், நாமக்கலில் 47 பேரும், சேலத்தில் 38 பேரும், திருப்பூரில் 62 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் குறைந்தபட்சமாக தூத்துக்குடி, தென்காசி, புதுக்கோட்டையில் தலா ஒருவரும் உள்பட 16 மாவட்டங்களில் 5-க்கும் குறைவானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தேனியில் புதிய பாதிப்பும் ஏதும் இல்லை.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 27 லட்சத்து 31 ஆயிரத்து 193 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 15 லட்சத்து 89 ஆயிரத்து 7 ஆண்களும், 11 லட்சத்து 33 ஆயிரத்து 461 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேர் உள்பட 27 லட்சத்து 22 ஆயிரத்து 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனாவுக்கு தமிழகத்தில் அரசு ஆஸ்பத்திரியில் 9 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 5 பேரும் என 14 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். 32 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 36 ஆயிரத்து 415 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 782 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 8 ஆயிரத்து 484 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *