புதுடெல்லி, ஏப்.12-
தமிழ்நாட்டில் பா.ஜ.க.–அண்ணா தி.மு.க. கூட்டணி உறுதியாகி இருக்கிறது. இதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி குடும்பத்தில் அண்ணா தி.மு.க. இணைந்தது மகிழ்ச்சி. கூட்டணியின் பிற உறுப்பினர்களுடன் இணைந்து தமிழ்நாட்டை வளர்ச்சியின் புதிய உயரத்துக்கு எடுத்துச்செல்வோம். மாநிலத்துக்கு தொடர்ந்து சேவையாற்றுவோம். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் ஒரு அரசு அமைவதை உறுதி செய்வோம்’ என குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் அவர், ‘மாநில நலனுக்கும், தமிழ் கலாசாரத்தின் தனித்துவத்தை பாதுகாக்கவும் ஊழல் மற்றும் பிரிவினைவாத தி.மு.க.வை விரைவில் அகற்றுவது முக்கியம். அதை நமது கூட்டணி நிறைவேற்றும்’ என்றும் கூறியுள்ளார்.
இதேபோல் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணும் பா.ஜ.க. – அண்ணா தி.மு.க. கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.