செய்திகள்

தமிழ்நாட்டில் எழும் சர்ச்சைகளுக்கு ஆளுநரே காரணம்: ப.சிதம்பரம் சாடல்

செனனை, ஜன. 27–

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கல்வியியல் பல்கலைக்கழகம் ஆகிய மூன்று பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர் பணியிடம் தற்போதுவரை காலியாக உள்ளது. அவற்றுக்கு துணை வேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பான கோப்புகளை ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்தது. அதற்கு கையெழுத்திடாமல் ஆளுநர் ரவி தாமதப்படுத்தி வந்தார்.

இந்நிலையில், ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் பல்கலைக்கழக விவகாரமும் சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்த ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. இதனடிப்படையில் ஆளுநர் ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இதனை ஏற்று அவரை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து, சர்ச்சைக்கு காரணமாக இருந்து 3 பல்கலைக் கழகங்களுக்கும் துணைவேந்தர்களை தேர்வு செய்ய, நியமித்த தேடுதல் குழுக்களை திரும்பப் பெறுவதாக ஆளுநர் ரவி அறிவித்துள்ளார்.

ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

கடந்த சில மாதங்களாகவே ஆளுநர் எடுக்கும் முடிவுகள், தவறானவையாக இருப்பதும், பின்னர் அவற்றை அவர் மாற்றிக் கொள்வதுமாக இருந்து வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றசாட்டு வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் எழும் பல்வேறு சர்ச்சைகளுக்கு ஆளுநர் ரவியே காரணமாக இருந்து கொண்டிருக்கிறார் என முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை பல்கலைக்கழகம் 5 மாதங்களாக துணைவேந்தர் இல்லாமல் இருப்பதற்கு ஆளுநர் ரவியே காரணம். 1857 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்தியாவின் முதல் 3 பல்கலைக்கழகங்களில் ஒன்று சென்னை பல்கலைக்கழகம். துணைவேந்தர் நியமனத்தில் தமிழ்நாடு அரசுடன் ஆளுநர் ரவி மோதல் போக்கை கடைபிடிப்பதே இத்தகைய அவலத்துக்கு காரணம் என்றும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *