மத்திய அரசு அறிக்கை கேட்கிறது
புதுடெல்லி, ஜூன் 27-
தமிழ்நாட்டில் உள்ள பாக்ஸ்கான் இந்தியா ஆப்பிள் ஐபோன் தொழிற்சாலையில் திருமணமான பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவது இல்லை என்று தகவல் வெளியானது.
இதுகுறித்து தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறையிடம் மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் விரிவான அறிக்கை கேட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஆண், பெண் தொழிலாளர்களை வேலைக்கு சேர்க்கும்போது பாகுபாடு பார்க்கக்கூடாது என்று 1976-ம் ஆண்டு சம ஊதிய சட்டத்தின் 5-வது பிரிவு தெரிவிக்கிறது.
இந்த சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு உரிய அதிகாரம் பெற்ற அமைப்பு மாநில அரசாகும். எனவே, மாநில அரசிடம் அறிக்கை கேட்டுள்ளோம்.
மேலும், பிராந்திய தலைமை தொழிலாளர் ஆணையாளரும் அறிக்கை அளிக்குமாறு கேட்டுள்ளோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.