சிதம்பரம், ஏப். 13–
தமிழ்நாட்டிற்கு பல திட்டங்களை வழங்கியவர் பிரதமர் மோடி என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் கூறினார்.
சிதம்பரம் மக்களவை தொகுதி பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து சிதம்பரம் காந்திசிலை அருகே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :
தமிழ்நாட்டில் இருந்து ஆதிதிராவிட பெண், மக்கள் தொண்டாற்ற இங்கு முன்வந்துள்ளார். இந்த 10 ஆண்டுகளாக இந்த தொகுதியில் பாஜகவை சேர்ந்தவர் இல்லை. ஆனால் இங்கு எம்பியாக இருந்தவர் எதுவும் செய்யவில்லை. சிதம்பரத்திற்கும் சரி, தமிழ்நாட்டிற்கும் சரி நிறைய திட்டங்களை கொண்டு வந்தவர் பிரதமர் மோடி. சிதம்பரம் தொகுதிக்கு மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளார்கள். ஏழைகளுக்கு நலம் சேர்க்கும் அன்னம் திட்டம் 80 கோடி மக்களுக்கு 2020 முதல் இன்று வரை இலவசமாக தனி நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசியும், கோதுமையும் வழங்கப்பட்டு வருகிறது. விவசாயிகளை பற்றி, ஏழைகளை பற்றி, பெண்களை பற்றி, இளைஞர்களை பற்றி இந்த 4 விஷயங்கள் பற்றி கூறுகிறார். விவசாயிகளிலும் அனைத்து சாதியினர் உள்ளனர். பின்தங்கியவர்களும் உள்ளனர். பட்டிலினத்துவரும் உள்ளனர். இதேபோன்று ஏழைகளிலும், பெண்களிலும், இளைஞர்களிலும் உள்ளனர். இந்த நாலு வர்க்கத்திற்கு எந்தவித பாகுபாடின்றி திட்டங்களை செயல்படுத்தினால் அனைவரும் முன்னேறுவார்கள் என பிரதமர் மோடி திட்டங்களை கொண்டு வந்தார். சிதம்பரம் தொகுதியில் விவசாயிகளுக்கு நெல்லும், சோளமும், வேர்க்கடலை, எள்ளும் ஆகியவற்றின் ஆதார விலையை உயர்த்தியவர் மோடி.
திமுக ஆட்சியிலிருக்கும் போது எதுவும் செய்யவில்லை. மத்தியில் காங்கிரஸ் கட்சியுடன் தோழமை கட்சியாக இருந்த திமுக மற்றும் தோழமை கட்சிகளும் சிதம்பரம் தனி தொகுதிக்கு எந்த வித முன்னேற்த்திற்கும் திட்டம் செயல்படுத்தவில்லை. இங்குள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளிநாட்டுகளில் பிரசித்தி பெற்றதாக விளங்கியது. இதனை அரசு கையக்கப்படுத்தி, இனைவேந்தரை வெளியேற்றி, அதன் அறக்கட்டளையை நீக்கிவிட்டு முழுமையாக அரசு கையப்படுத்தியது. அதிலிருந்துஅந்த பல்கலைக்கழகமும், அதனுடைய மருத்துவமனையும் எப்பேற்பட்ட நிலையில் உள்ளது என்று பார்த்தால் வேதனையாக உள்ளது. கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் மூலமாக இந்த பல்கலைக்கழகத்தை மீண்டும் முன்னுக்கு கொண்டு வர வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பாஜக வேட்பாளர் பி.கார்த்தியாயினி பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட தலைவர் கே.மருதை, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வ.மகேஷ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர்கள் நெடுஞ்செழியன், எஸ்.புரட்சிமணி, புதிய நீதிகட்சி மாவட்ட செயலாளர் நரசிம்மன், பாஜக முன்னாள் எம்எல்ஏ காய்த்திரிதேவி, மயிலாடுதுறை என்.ராஜேந்திரன், முன்னாள் எம்எல்ஏ பி.எஸ்.அருள், மாநில முன்னாள் ராணுவ வீரர் பிரிவு துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், மாவட்ட வழக்குரைஞர் பிரிவு தலைவர் முகுந்தன், பாஜக நகர தலைவர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர். முன்னதாக அவர் தனி ஹெல்காப்டர் மூலம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விமான தளத்தில் வந்திறங்கி பிரசார மேடைக்கு வந்தார், பின்னர் ஹெலிகாப்டர் மூலம் தஞ்சை புறப்பட்டு சென்றார்.