செய்திகள்

தமிழ்நாட்டின் 27 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

சென்னை, நவ. 26–

தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் பள்ளிகள், கல்லூரிகளுக்கும், 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறையும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதன் காரணமாக, தமிழ்நாட்டில் 28 ஆம் தேதி வரை பல மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பல மாவட்டங்களில் கனமழை மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.

27 மாவட்டங்களில் விடுமுறை

அதன்படி,மயிலாடுதுறை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, திருவாரூர், கடலூர், கன்னியாக்குமரி, சென்னை, விழுப்புரம் ஆகிய 18 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர், செங்கல்பட்டு, நாமக்கல் ஆகிய 9 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை எதிரொலியாக புதுச்சேரி, காரைக்கலில் இன்றும், நாளையும் பள்ளிகள், கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *