வாழ்வியல்

தமிழ்நாட்டின் பல வகை செடி வகைகள்; கிடைக்குமிடம்!

1) இலை அழகு தாவரம் (Foliage Plants)– குரோட்டன்ஸ், அமோனா, அக்லோனிமா, கோலியஸ் பாம்ஸ் வகைச் செடிகள்.

2) பூ வகை செடிகள் (Flowering Plants)– ரோஜா, மல்லி, கனகாம்பரம், செம்பருத்தி, செண்பகம் நந்தியாவட்டை, எக்சோரா, அரசமுண்டா ஆகியவை.

3) வரி தாவரங்கள் (Hedge Plants)– துராண்டா, பைசோனியா, எராந்திமா, அக்காலிப்பா, சவுக்கு போன்றவை.

4) தொங்கும் செடிகள் (Hanging Plants)– டெட்டர்கேன்சியா, பெப்ரோமியா, ஆஸ்பரகேஸ், குளோரோபைட்டம் ஆகியவை.

5) படர் தாவரங்கள் (Trailing Plants)– ஏர்வா பொன்னாங்கண்ணி, கூப்பியா, வெடிலியா, போர்ட்லுக்கா ஆகியவை

6) கொடி வகை செடிகள் (Climbers Plants)– வெர்னோனியா, முல்லை, அடினோகெலிமா, மார்னிங் குளோரி, சினோசியா

7) பழ வகை செடிகள் (Fruits Plants)– சப்போட்டா, எலுமிச்சை, மா, கொய்யா, சீதா மற்றும் சிறுநெல்லி, பெருநெல்லி ஆகியவை.

8) மர வகை செடிகள் (Tree Plants)– பூவரசு, பாகினியா, தென்னை, குல்மோகர், பெத்தோடியா, பனை, கேசியா ஆகியவை.

மேற்குறிப்பிட்ட செடிகளில், பலவிதமான ரகங்களும் சீசனல் (Annuals) செடிகளும் பல நர்சரிகளில் கிடைக்கிறது.

ஒருவர் தனது வீட்டின் முன் பகுதியில், ரோஜா, மல்லி, செம்பருத்தி, கனகாம்பரம் ஆகிய மலர் செடிகளை வைத்து நெடுநாட்களாக பராமரித்து வருவதாக வைத்துக் கொள்வோம். தினமும் எழுந்து பார்க்கும்போது, அச்செடியின் வளர்ச்சியை அதில் வளரும் மலரை பார்த்து அவரது உள்ளம் பரவசம் அடைகிறது. இந்த சந்தோசத்தை தாமாக வரவழைத்துக் கொள்ளும் நிலையில் நாம் உள்ளோம்.

இதேபோல, யாவருடைய ஆர்வத்தையும் தூண்டும் வகையில் இந்த செடிகள் உள்ளன. 1000க்கும் மேற்பட்ட ரகங்களில் 10,000க்கும் மேற்பட்ட செடிகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அவை கிடைக்கும் இடங்கள், விவரம் அறிய…

தனியார் நர்சரி…

போன்: 0425 255013, செல்: 98422 33017

இதுபோன்ற தனியார், அரசு, N.G.O. வனத்துறை, வேளாண்மை கல்லூரி நரசு, பல வகைச் செடிகள் பற்றி அறிய, விலைக்கு வாங்க, நர்சரி தொடங்க…

1) நாம் கால், தமிழ்நாடு அரசு, சென்னை (மூலிகை செடிகள்) 044 2620 2640

2) www.tnagrisnet.tn.gov.in/fcms/tanseda

3) www.surebhinursery.in

(4) www.ishaout reach.org/project

(5) www.tnau.ac.in

(6) www.forests.tn.gov.in/view

(7) www.tn.treepedia.com

(8) www.agritech.tnau.ac.in>horticulture

(9) www.agricultureinformation.com

(10) www.support.wwfindia.org>aat

(11) www.kumarannursery.com

(12) www.nrnursery.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *