சிறுகதை செய்திகள்

தமிழ்நாட்டின் அதிசய அறிவியல் மேதை ஜி.டி. நாயுடு

Makkal Kural Official

இவரைத் தெரிந்து கொள்ளுங்கள்! : ஆர். வசந்தா


நான் கண்டு வியந்த தமிழ்நாட்டின் மாபெரும் விஞ்ஞானி கோபாலசாமி துரைசாமி என்ற ஜி.டி. நாயுடு.

நான் 1955ல் 7 வது படிக்கும்போது எங்கள் பள்ளியில் என்னையும் எங்கள் பள்ளிக் குழந்தைகளையும் உல்லாசப் பயணம் அழைத்துச் சொன்றார்கள்.

கோயமுத்தூரில் ஜி.டி.நாயுடு நிர்மாணித்திருந்த விஞ்ஞான கூடத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு தான் பல கண்டுபிடிப்புகளைப் பார்த்து வியந்தேன். ஒரு பெரிய அறை முழுதும் அவரே செய்த சாதனங்கள் தான் இருந்தன. முதலில் அவரின் ஒரு டேப்ரிகார்டரில் என் சிநேகிதி ஒரு பாட்டுப் பாடினாள். அது அப்படியே திரும்பிச் சொன்னது. எல்லோரும் அதன் முன் அவரவர் பெயர்களைச் சொன்னோம். அதுவும் திருப்பிச் சொன்னது. ‘‘ஆத்தா’’ … இது என்ன சொன்னதையெல்லாம் திருப்பிச் சொல்கிறதே என வியந்தோம்.

அந்த அறை முழுவதும் இப்படி பல சாதனங்கள் இருந்தன. ஆனால் ஒருவரும் விளக்கிச் சொல்லவில்லை.

வெளியே அவரின் விவசாயப் புரட்சியைப் பார்த்தேன். பல அதிசய கண்டுபிடிப்புகள் இருந்தன. நான் எங்கள் தோட்டத்தில் பருத்தி பிஞ்சுகள் ஒரு நெல்லிக்காய் அளவே இருக்கும். அவர் விளைவித்தது ஒரு சாத்துக்குடி அளவு. நீண்ட இழைப்பருத்தியாகும். அதனாலேயே கோயமுத்தர் ‘தென்னாட்டின் மான்செஸ்டர்’ என்ற பெயர் கிடைத்தது. அவர் கண்டுபிடிப்பிடித்ததின் அளவு.

நாம் ஒரு கிலோ பருப்பு கிடைக்க எவ்வளவு செடி வேண்டுமோ அந்த செடியில் 5 கிலோ பருப்பு கிடைக்கும் என்றார். அவரே அங்கு நின்று கொண்டிருந்தார். அத்தனை பருவட்டுப் பருப்பு.

சோளம் பயிரிட்டிருந்தார். சாதாரணமாக 4 அடி உயரம் வரும். அவர் அதை 15 அடி உயரம் வளர அதனை உரமிட்டு வளர்த்திருந்தார். நினைத்து பார்க்கவே பிரமிப்பாக இருந்தது.

பப்பாளி மரம். அந்தக் காலத்தில் ஒரு தேங்காய் அளவே இருக்கும் பப்பாளிப் பழம் அதில் நூற்றுக்கணக்கான விதைகள் இருக்கும். பழங்கள் மெகா சைஸில் இருந்தன. அவர் தோட்டத்தில். அது மாதிரி பல மரங்கள் இருந்தன. ஆனாலும் ஒரு வருந்தத் தக்க விஷயம். ஆங்காங்கே அவர் ஒரு அட்டையில் ஒரு விஷயம் எழுதி தொங்க விட்டிருந்தார்.

என்னவென்றால் இந்த பழங்களைத் தொடுபவர்கள் செருப்பால் அடிக்கப்படுவார்கள் என்பது தான். அத்துடன் ஒரு செருப்பையும் கட்டித் தொங்க விட்டிருந்தார். என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியாமல் வெட்கித் தலை குனிந்தேன். பல விவசாயப் புரட்சியை காணாமல் திரும்பி விட்டேன் வேறு அவரின் படைப்புகளை காண.

அடுத்த புரட்சி:–

வீட்டு மனைகள் தான்.

சில வீடுகளை எளிய மக்களுக்காக கட்டியிருந்தார். விலை ரூ.70, ரூ.80, ரூ.100 என விலையிட்டிருந்தார். ஒரு தடவை ஜனாதிபதி கிரி, அவரின் விஞ்ஞானக் கூடத்தை காண வந்தார். வந்தவுடன் வீட்டை கட்ட ஆரம்பித்தார். திரும்பிப் போகும்போது கட்டிமுடித்த வீட்டுச் சாவியை அவரிடம் ஒப்படைத்தார். மிகவும் ஆச்சரியப்பட்டுப் போனார் நம் ஜனாதிபதி. நோபல் பரிசு பெற்ற இந்திய விஞ்ஞானி சர்.சி.வி.ராமனும் நம் ஜி.டி. நாயுடுவின் திறமையை பார்த்து மிரண்டு போனார்.

ஆரம்பத்தில் படிப்பு அவரது மண்டையில் ஏறவில்லை. குறும்பும் அதிகமாக இருந்தது. அதனால் அவரை ஒரு நிலத்தில் வேலை செய்ய ஒரு விவசாயிடம் ஒப்படைத்தார்கள். பிறகு கோயமுத்தூர் வந்தார். புகை வண்டியைக் கண்டார். ஒரு ஓட்டலில் சர்வராகச் சேர்ந்தார். 3 ஆண்டுகள் வேலை.

பிறகு ஒரு தோட்டத்தில் வேலை செய்த போது ஒரு ஆங்கிலேயத் துரை ஓட்டிச் சென்ற சைக்கிளைப் பார்த்து அதிசயப் பட்டார்.

ஒரு மாடு இல்லை ; இழுத்துச் செல்ல எதுவும் இல்லை. மேலும் எந்தவிதமான எரிபொருளும் இல்லை, புகை இல்லை. எப்படி ஓடுகிறது; இதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து சைக்கிளின் நுட்பத்தை தெரிந்து கொண்டார். இது தான் எளிய மக்களின் வாகனம் என்றும் முடிவு செய்தார். ஒரு பெரிய சைக்கிள் தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

பின்னாளில் பணம் சேர்த்து பஸ் வாங்க முடிவு செய்தார். அதற்காக ஓட்டலில் சர்வராகவும் மீதி நேரத்தில் ஒரு ஆங்கிலேயே அதிகாரியிடமும் வேலை பார்த்தார். நாயுடு தன் சம்பள பணம் உங்களிடமே இருக்கட்டும் என்றார்.

அந்த அதிகாரி எதற்காக பணம் சேர்க்கிறாய் என்றார். நான் ஒரு பஸ் வாங்க முடிவு செய்துள்ளேன். அதற்காகத் தான் என்றார்.

நான் பஸ் வாங்கித் தருகிறேன். நீ ஓட்டி அந்த லாபத்தை கொடு என்றார்.

சம்மதமும் கொடுத்து விட்டார். நம் ஜி.டி. நாயுடு ஆங்கிலமும் அவரிடம் கற்றுக் கொண்டார்.

முதல் பஸ்ஸில் தானே முதலாளியாகவும் தொழிலாளியாகவும் வேலை பார்த்தார். 2 அல்லது 3வது படிக்க ஒரு ஆர்வமுள்ள இளைஞனை தேர்ந்தெடுத்து அவரே முன்னின்று எல்லா பஸ்ஸின் தொழில்நுட்பம் அனைத்தையும் கற்றுக் கொடுத்தார்.

பின் ஒரு புது பஸ் வாங்கி அந்த இளைஞனையே ஓட்டுநராகவும் பணி செய்யும் தொழிலாளியாகவும் உட்கார வைத்தார். இப்படி 600 பஸ் வாங்கி தமிழ்நாடெங்கும் ஓடச் செய்தார். அந்தப் போக்குவரத்து துறையின் பெயர் U.M.S. (Universal Motor Service) புதிய பணிமனைகளையும் பஸ் ஆரம்பிக்கும் இடத்தையும் நவநாகரீகமாகக் கட்டி அசத்தினார்.

ஒரு பேக்கரியில் கொஞ்சநாள் வேலை பார்த்தார். ரொட்டிகளை சின்னதாக வெட்டும் பணி செய்தார். அந்த நுட்பத்தை வைத்து தான் ஆண்களுக்கான ரேசர், Trimmer போன்றவற்றை செய்தார். உலகெங்கும் அதற்கு வரவேற்பும் காப்புரிமை வாங்கவும் போட்டி போட்டனர். ஆனால் நம் ஜி.டி. நாயுடு நான் செய்ததும் அனைத்தும் என் நாட்டிற்கே என்றார்.

பின் மலிவு விலை கார் (சுமார் 30 ஆயிரம்) ரூபாயில் செய்தார். அரசாங்க அனுமதி கிடைக்காததால் நடு ரோட்டில் வைத்து சுக்குசுக்காக உடைத்தெறிந்தார். அப்போது நீ ஒரு முட்டாள் என்றார் பெரியார் . எவ்வளவு எதிர்ப்பு அந்த வார்த்தைக்கு வந்தாலும் அவர் முட்டாள் தான் என்று பெரியார் சொன்னதை வாபஸ் வாங்கவேயில்லை.

அவர் முதன்முதலில் ஒரு பாலிடெக்னிக் காலேஜ், சைக்கிள் பேக்டரி, பேனா, பால்பாயிண்ட் பேனா என்று ஆரம்பித்தார். காலேஜிற்கு சில பஸ் தயாரித்ததும் கொடுத்தார்.

அவரே. ஹிட்லரை ஜெர்மனியில் ஒரு உணவகத்தில் சந்தித்து பேசினார். ஹிட்லர் அன்புடன் பேசினார்.

2 பேரும் மனம் விட்டு பேசினார்கள்.

ஜி.டி. நாயுடு தன் திறமையை தனது முயற்சி உழைப்பின் யின் முலம் மென் மேலும் வளர்த்துக் கொண்டு விஞ்ஞானியாக , கண்டுபிடிப்பாளராக தொழில் அதிபராக கோடீசுவரராக உயர்ந்து நாட்டுக்கு நன்மை செய்தார்.

காமராஜர் மக்கள் மதிக்கும் பெருந்தலைவர் ஆனார். ஏன்? நீ நாட்டிக்கு என்ன செய்தாய் என்றதால்…? படிப்பறிவு இல்லாத கோடிக்கணக்கான பிள்ளைகளுக்கு இலவசப் பள்ளிக்கூடம் கட்டிகொடுத்து கல்வி கொடுத்ததால்…..

எம்.ஜிஆர். மக்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து முதல்வரானார். ஏன்? அவர் நாடு, அதைநாடு, அதை நாடா விட்டால் உனக்கு ஏது வீடு ? என்றதால் தான்.

நாடென்ன செய்தது எனக்கு? என்றால் யாரும் மக்கள் மனதில் இடம்பெற முடியாது.

நாட்டிக்கு நாம் என்ன செய்தோம் என்று நம்மை நாமே கேட்டு நல்லது செய்தால்த்தான் சாதனைகள் படைத்து வரலாற்றை உருவாக்கலாம் . அதன்மூலம் உயர்வது நாம் மடடுமல்ல; நம் வீடும் நாடும் : மேலும் மேலும் உயர்வோம்.


Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *