செய்திகள்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புகழாரம்

சென்னை, செப். 2–

தொலைநோக்குப் பார்வையும் அர்ப்பணிப்பும் கொண்ட மக்கள் தலைவராக ஸ்டாலின் விளங்குகிறார் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தனது டுவிட்டர் பதிவில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி புகழாரம் சூட்டியுள்ளார்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிரஞ்சீவி. திரையுலகினராலும், ரசிகர்களாலும் மெகா ஸ்டார் என்று அழைக்கப்படுபவர். நேற்று சென்னை வந்திருந்த தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

மக்கள் தலைவராக ஸ்டாலின்

இந்தச் சந்திப்பு தொடர்பாக தனது டுவிட்டர் பதிவில் சிரஞ்சீவி கூறியிருப்பதாவது:–

“தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. கட்சி எல்லைகள் தாண்டி, அவர் எடுத்து வரும் சில பயனுள்ள முயற்சிகள் மூலம், சிறந்த அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருப்பதற்கும், மக்களின் தலைவராக, தொலைநோக்குப் பார்வை மற்றும் அர்ப்பணிப்பு கொண்ட சிறந்த தலைவராக விளங்குகிறார்.

மேலும், கொரோனா காலகட்டத்தில் சிறப்பான ஆட்சி தந்து வருவதற்காகவும் அவருக்கு வாழ்த்துகள் கூறினேன். இவ்வாறு சிரஞ்சீவி டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதுடன், முதலமைச்சருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *