செய்திகள்

தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கத்தின் சுதந்திர தின யோகாசன போட்டிகள்

சென்னை, ஆக. 10–

தமிழ்நாடு மாநில யோகா வளர்ச்சி சங்கம், சென்னை மாவட்ட யோகா வளர்ச்சி சங்கத்தின் சார்பில் 23–வது ஆண்டு சுதந்திர தின யோக விழா மற்றும் 11வது மாநில அளவிலான யோகாசன போட்டிகள் மற்றும் பரிசளிப்பு விழா 15–ந் தேதி வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு திருமுல்லைவாயல் வைஷ்ணவி மஹாலில் நடைபெறுகிறது.

நிகழ்ச்சியை சங்க நிறுவனர் ஜி.டி.அன்பரசன் தலைமையில் டாக்டர் ராதாகிருஷ்ணன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்கிறார். ஸ்ரீமனோ யோகாச்சாரியார் வரவேற்புரையாற்றுகிறார். பி.குமார் முன்னிலையில் மகளிர் குழு யோகப் பயிற்றுநர் பி.சைலஜா ஏற்புரையாற்றுகிறார். அகஸ்தீஸ்வரன் நன்றி கூறுகிறார்.

யோகாசன போட்டியை எம்.தண்டபாணி துவக்கி வைக்கிறார். மாலை 2.15 மணிக்கு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நிறுவனர் ஜி.டி.அன்பரசன் தலைமையில் தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில செயலாளர் புண்ணியமூர்த்தி பரிசுகள் வழங்குகிறார். விழாவில் மாநில துணைச் செயலாளர் ஆர்.தயாளன் வரவேற்புரையாற்றுகிறார். மாநில தலைவர் ரகுகுமார் முன்னிலை வகிக்கிறார். பி.சுரேஷ்குமார் ஏற்புரையாற்றுகிறார். ஸ்ருதிய லய கான நிலைய நிறுவனர் டி.ஆர்.எஸ்.ஜெகன்நாதன், திருநின்றவூர் பேரூராட்சி துணை செயலாளர் பி.துரைராஜ் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். ஆர்.வெங்கடகிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *