செய்திகள்

“தமிழ்நாடு” பொன்விழா ஆண்டு போட்டிகள்: வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பரிசு

திருவண்ணாமலை, செப். 8–

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தமிழ் வளர்ச்சித் துறை, கலை பண்பாட்டுத் துறை, விளையாட்டுத் துறை சார்பாக “தமிழ்நாடு” பெயர் சூட்டப்பட்ட பொன்விழா ஆண்டை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மொத்தம் ரூ.90 ஆயிரம் பரிசுத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினார்.

தமிழ்நாடு 50–ம் ஆண்டு பொன்விழாவினை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பாக கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடத்தி முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என 9 பரிசுகளும், கலைப் பண்பாட்டுத் துறை சார்பாக குரலிசை, பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டிகள் நடத்தி முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் என 9 பரிசுகளும்,

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக 100 மீட்டர் ஓட்டப்பந்தயம், உயரம் தாண்டுதல் மற்றும் நீளம் தாண்டுதல் ஆகிய போட்டிகள் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடத்தப்பட்டு முதல் பரிசு ரூ.2,500, இரண்டாம் பரிசு ரூ.1,500 மூன்றாம் பரிசு ரூ.1000 என 18 பரிசுகளும், ஆக மொத்தம் 36 நபர்களுக்கு ரூ.90 ஆயிரம் பரிசுத் தொகையும், பாராட்டுச் சான்றிதழும் அமைச்சர் வழங்கினார்.

மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்வார்கள். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.50 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம், இரண்டாம் பரிசு ரூ.25 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.10 ஆயிரம் மற்றும் 4 கிராம் தங்கப் பதக்கம், சென்னையில் நடைபெறவுள்ள “தமிழ்நாடு” 50 ஆம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டம் நிகழச்சியில் முதலமைச்சரால் வழங்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கே.எஸ்..கந்தசாமி, செய்யார் சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன், ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் செஞ்சி சேவல் ஏழுமலை, தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் க.பவானி, கலை பண்பாட்டுத் துறை உதவி இயக்குநர் குமார், மாவட்ட அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.சங்கர், நகர அம்மா பேரவை செயலாளர் பாரி பி.பாபு, மாவட்ட இணை செயலாளர் விமலா மகேந்திரன், நகர செயலாளர் எ.அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் ஆரணி பிஆர்ஜி சேகர், மேற்குஆரணி அரையாளம் எம். வேலு, மாவட்டபிரதிநிதி அகிலேஷ் பி.ஜி.பாபு, நகர மாணவரணி செயலாளர் பிஸ்கட் கே. குமரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை துணை செயலாளர்கள் எ.கோவிந்தராசன், எஸ்.சுந்தரமூர்த்தி, மேற்கு ஆரணி ஒன்றிய புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் கொளத்தூர் பி. திருமால், ஒன்றிய இளைஞரணி செயலாளர் புங்கம்பாடி பி.சுரேஷ், ஒன்றிய அம்மா பேரவை இணை செயலாளர் பையூர் ஆர்.சதீஷ்குமார், பிஎடிசி உதயசங்கர், இ.பி நகர் குமார், ஒன்றிய பிரதிநிதி புலவன்பாடி ஆர்.சுரேஷ்ராஜா மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *