செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் 2025-26: சட்டசபையில் தாக்கல்- Live

Makkal Kural Official

சென்னை, மார்ச் 14-

தமிழ்நாடு சட்டப்பேரவையில், இன்று காலை 9.30 மணிக்கு 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்கிறார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய் வரவுகள், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி எவ்வளவு என்பது போன்ற தகவல்களை அவர் வெளியிடுகிறார். மேலும், வருகிற நிதியாண்டு (2025-26) தமிழ்நாடு அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள், உத்தேசமான வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவைக்கு அளிக்கிறார்.

பொதுமக்கள் உடனடியாக அறிந்து கொள்ளும் வகையில் தமிழக பட்ஜெட் அறிவிப்புகள் தமிழகம் முழுவதும் 936 இடங்களில் எல்.இ.டி. திரை மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்யபடுகிறது.

சென்னை மாநகராட்சியில் 100 இடங்களிலும், இதர மாநகராட்சி பகுதிகளில் 48 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 274 இடங்களிலும், பேரூராட்சிகளில் 425 இடங்களிலும் காலை 9.30 மணி முதல் பட்ஜெட் உரை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *