செய்திகள்

தமிழ்நாடு நிதியமைச்சர் பெயரில் போலி மின்னஞ்சல்: போலீசார் வழக்குப்பதிவு

சென்னை, ஆக.9–

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி அவதூறு பரப்பிய மர்ம நபர்கள் மீது 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பெயரில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி, இஸ்லாமியர்களைப் பற்றி அவதூறான கருத்துகளை பதிவிட்டு அரசியல் சாராத இஸ்லாமியர்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

7 பிரிவுகளில் வழக்கு

இந்த விஷம செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், போலி மின்னஞ்சலை நீக்கக் கோரியும் நிதி அமைச்சர் சார்பில் சென்னை அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், அபிராமபுரம் போலீசார் மதம், இனம் அடிப்படையில் இரு பிரிவினரிடையே பகைமையை தூண்டுதல் , ஒரு மதத்தினரின் நம்பிக்கையை வேண்டுமென்றே புண்படுத்துதல், பொய்யான ஆவணங்கள் தயாரித்தல், அவதூறு பரப்புதல், தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *