வாழ்வியல்

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை!

Spread the love

தமிழ்நாடு அரசு 1985ம் ஆண்டு தொடங்கிய முகமை 2016–-17ல் 803 மெகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் திறன் கூட்டப்பட்டுள்ளது. 63 ஆயிரத்து 466 பசுமை வீடுகள் சூரிய ஒளி சக்தி மூலம் எரியூட்டப்பட்டுள்ளது. 31.5.2017 வரை புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மொத்த நிறுவு திறன் 10 ஆயிரத்து 480 மெகாவாட் ஆகும். இத்துறையில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.

இந்த முகமையின் தனித்தன்மை வாய்ந்த புதிய பல திட்டங்கள்

* சூரிய ஒளியுடன் கூடிய முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டம்:-

சூரிய சக்தி மேற்கூரை திட்டத்தில், கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் 60 ஆயிரம் வீடுகள் வீதம் 3 லட்சம் பசுமை வீடுகளில் சூரிய சக்தியால் இயங்கும் விளக்குகளை 2011-–12 to முதல் 2015–-16 வரை 5 ஆண்டுகளில் நிறுவப்பட்டுள்ளது. இதுவரை 2 லட்சத்து 36 ஆயிரத்து 207 வீடுகளில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 9606 நெசவாளர்கள் குடியிருப்புகளில் சூரிய சக்தி விளக்குகள் மின்னூட்டப்பட்டுள்ளன. பயனாளிகளிடம் இருந்து குறைகளை பதிவு செய்ய தனிப்பிரிவு உள்ளது.

* தெரு விளக்குகளை சூரிய சக்தி மூலம் ஒளிர்விக்கும் திட்டம்:-

2011 முதல் 2015-–16 வரை 5 ஆண்டுகளில் 1 லட்சம் தெரு விளக்குகளை, மின் சிக்கன விளக்குகளாக மாற்றப்பட்டுள்ளது. இரவு 10 முதல் காலை 5 மணி வரை இவை ஏரியும். இவற்றை சூரிய மின்சக்தி ஏறியூட்டுகிறது. 39 ஆயிரத்து 235 தெரு விளக்குகள் இதுவரை மின்னூட்டப்பட்டுள்ளன. மீதமுள்ளவைகள் மின்னூட்ட பணிகள் நடைபெறுகிறது.

* முதலமைச்சரின் சூரிய மேற்கூரை ஊக்கத்தொகை திட்டம்:-

1 கிலோ வாட் திறன் கொண்ட மின் கட்டமைப்புடன் கூடிய மின் கலன்கள் அற்ற சூரிய மேற்கூரை அமைப்புகளை 10 ஆயிரம் வீட்டு உபயோகிப்பாளர்கள் நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சக மானியத்துடன் மூலதன ஊக்கத்தொகை 1 கிலோ வாட்டுக்கு ரூ. 20 ஆயிரம் மாநில அரசு வழங்கி வருகிறது. உற்பத்தி சூரிய சக்தியை வீட்டு உபயோகம் அல்லது மின் கட்டமைப்பிற்கோ நிகர அளவு ஏற்பாட்டின் மூலம் செலுத்தலாம். தனிப்பட்ட / அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு நிறுவும் திறன் 1 கிலோ வாட் ஆகும். அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு 5, 10 கிலோ வாட், அதன் பன்மடங்கு திறன் கொண்ட சூரிய அமைப்புகள் கூட்டாக விண்ணப்பிக்கலாம். இது வரை 3 ஆயிரத்து 382 சூரிய மேற்கூரை அமைப்புகள் நிறுவப்பட்டுள்ளன.

* அரசு கட்டிடங்களில் சூரிய மேற்கூரை அமைப்புகளை ஊக்குவித்தல்:-

தனியாரைப் போலவே, அரசின் கட்டிடங்களிலும் சூரிய மேற்கூரை அமைப்புகளை நிறுவ தேவையான தொழில்நுட்ப ஆலோசனை / ஒப்பந்தப் புள்ளியை இறுதி செய்யும் செயல் முறைகளை இந்த முகாமை வழங்கி வருகிறது. தேவையான ஊக்கத்தொகையை இதற்கான அமைச்சகத்திடம் இருந்து பெறலாம்.

இம்முகமை அளிக்கும் ஊக்கத் தொகை விவரம்:-

1) இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில்,

ஒப்புதல் அளித்த காலத்திற்குள் 80 % க்கு மேல் முடித்தால்- ரூ. 16,250 (கிலோ வாட்)

2) 50% to 80% வரை முடித்தால் ரூ. 9750 (கிலோ வாட்)

3) 40% to 50% வரை முடித்தால் ரூ. 6500 (கிலோ வாட்)

4) 40% கீழ் முடித்தால் மானியம் இல்லை.

இது போன்று,

1) விளம்பரம் – விழிப்புணர்வு

(2) கழிவிலிருந்து எரிசக்தி திட்டங்கள்

(3) சூரிய சக்தி மின்சார பயன்பாட்டுக்கு நிதி உதவி (மாற்று சூரிய சக்தி நீர் இறைக்கும் மோட்டார் – மின் நிலையங்கள் – விளக்குகள்)

(4) சூரிய வெப்ப சக்தியினை பயன்படுத்தினால் நிதி மானியம்

(5) தாவர எரிசக்தி திட்டங்கள்

(6) சிறிய அளவிலான காற்று சக்தி – கலப்பின அமைப்பு என்று ஏராளமான திட்டங்களை நடைமுறைப் படுத்துகிறது.

எண்ணற்ற திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்படும் உதவிகள் விவரம் பெற…

தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகமை (Tamil Nadu Energy Dev.Agency)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *