வாழ்வியல்

தமிழ்­நாட்டில் பழங்­கு­டி­யினர் நலம்

பழங்­கு­டி­யினர் துணைத் திட்­டம்
1976–77 முதல் மைய அரசு பழங்­கு­டி­யினர் துணைத்­திட்டம் என்­ற புதிய திட்­டத்தை உரு­வாக்கி நமது மாநி­லத்தில் செயல்­ப­டுத்தி வரு­கின்­றது. பின்­வரும் 10 மலைப் பகு­தி­களில் அதி­க­ளவில் பழங்­கு­டி­யினர் வாழும் 7 மாவட்­டங்­களில் பழங்­கு­டி­யினர் துணைத்­திட்டம் செயல்­ப­டு­கி­ற­து.
நாமக்கல் மாவட்டம் (கொல்­லி­மலை) சேலம் (ஏற்­காடு, கல்­வ­ராயன், அற­நூத்து, பச்ச மலை) திரு­வண்­ணா­மலை (ஜவ்­வா­து­மலை), விழுப்­புரம் (கல்­வ­ராயன் மலை), தர்­ம­பு­ரி (சித்­தேரி மலை) திருச்சி (பச்சை மலை), வேலூர் (ஜவ்­வா­து மலை( ஏரி­க­ரி­ம­லையும் உள்­ள­டங்­கி­ய­து)
பழங்­கு­டி­யினர் குடும்­பங்­களை பொரு­ளா­தார நிலையில் மேம்­ப­டுத்தி அவ­ரக்­ளுக்கு அடிப்­படை வச­திகள், இதர வச­தி­களை அளிப்­பதே பழங்­கு­டி­யினர் துணைத்­திட்­டத்தின் முக்­கிய குறிக்­கோ­ளா­கும்.
பழங்­கு­டி­யினர் துணைத்­திட்­டமானது பல்­வேறு துறை­களின் பங்­கேற்­புடன் செயல்­ப­டுத்­தப்­ப­டு­கி­ற­து. அத்­து­றை­களின் மொத்த நிதி ஒதுக்­கீட்­டி­லி­ருந்து 1.04% ஒதுக்­கீட செய்து பழங்­கு­டி­யி­ன­ருக்­கான மேம்­பாட்டுத் திட்­டங்­களை செயல்­ப­டுத்தி வரு­கி­ற­து.
பழங்­கு­டி­யினர் நல இயக்கம் வாயி லாக அவர்­க­ளுக்கு கறவை மாடுகள், ஆடு அல­குகள் வழங்கப் படு­கின்­றன. சிறு­தொழில் துவங்க இதற்­கு­ரிய இடு­பொ­ருட்­க­ளுக்கு நிதி­யு­தவி வழங்­கப்­ப­டு­கி­றது. பழங்­கு­டி­யினர் துணைத்­திட்­டத்தின் வாயி­லாக ஆண்­டு­தோறும் 10 ஆயிரம் பழங்­கு­டி­யி­னர்கள் பொரு­ளா­தார மேம்­பாடு அடைய பல்­வேறு திட்­டங்கள் தீட்­டப்­பட்டு செயல்­ப­டு­கின்­ற­ன.
முழு விவ­ரங்­க­ளுக்­கு
இயக்­குனர், பழங்­கு­டி­யினர் நலம்,
தமிழ்­நாடு அரசு, சேப்­பாக்கம்,
சென்­னை–5
www.tn.gov.in/deptof addravidawelfare

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *