சென்னை, ஜூலை 27–
அரசு அலுவலகங்களில் அலுவலர்கள், பணியாளர்கள் அனைவரும் அரசு ஆணைகளில் கூறப்பட்ட விதிமுறைகளின்படி தமிழில் கையொப்பமிட வேண்டும் எனவும் மாணவர்களையும் தமிழில் கையொப்பமிட அறிவுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசின் அரசாணையைக் குறிப்பிட்டு, பள்ளிக்கல்வி இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையின்படி, பள்ளிக்கல்வித் துறையில் அனைவரும் தமிழில் கையொப்பமிட வேண்டும். வருகைப்பதிவு, ஆவணங்களிலும் தமிழில் கையொப்பமிட வேண்டும் மற்றும் மாணவ-மாணவிகளையும் தமிழில் கையொப்பமிட அறிவுறுத்த வேண்டும்.
தமிழில் கையொப்பம்
மேலும், டிபிஐ வளாகம் தொடங்கி கடைநிலை அலுவலகம் வரை அரசு அலுவலகங்களில் பணிபுரியும் அலுவலர்கள் அனைவரும் அனைத்து இடங்களிலும் தங்கள் பெயரைக் குறிப்பிடும் போதும், கையொப்பமிடும் போதும் கண்டிப்பாக தமிழிலேயே கையொப்பமிட வேண்டும் என பள்ளிக்கல்வித் துறையின் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.