சென்னை, பிப். 11–
“உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம். அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்.” என்று த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு உலகெங்கும் உள்ள முருகக் கடவுளின் ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தைப்பூசத் திருவிழாவை ஒட்டி த.வெ.க. தலைவர் விஜய் எக்ஸ் சமூக வலைதளத்தில், “தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! அனைவருக்கும் தைப்பூசத் திருநாள் வாழ்த்துகள்!” எனப் பதவிட்டுள்ளார்.