சென்னை: 22
தமிழகத்தின் முன்னேற்றமே இந்தியாவின் வளர்ச்சியாகும் எனவும், கோவை மற்றும் மதுரைக்கான மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு மத்திய அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் எனவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கும் ஒவ்வொரு சந்திப்பிலும், இந்த இரண்டு நகரங்களுக்கான மெட்ரோ திட்டங்களை பலமுறை கோரியிருந்தும், அவை மறுக்கப்பட்டுள்ளதால் தமிழக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர் என்று அவர் தெரிவித்தார். மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தீர்மானமாக அமைவான இந்த உள்கட்டமைப்பு திட்டங்கள் தாமதமடைவது வருந்தத்தக்கது என்றும் கூறினார்.
“தமிழகத்தின் வளர்ச்சியே இந்தியாவின் வளர்ச்சி. இந்த நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க பிரதமர் தலையிட வேண்டும். இதற்காக அவரை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கத் தயாராக உள்ளேன்,” என முதல்வர் தெரிவித்தார்.
இதற்கிடையில், கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை திருப்பி அனுப்பியதற்கான காரணங்களைக் குறிப்பிட்டு, மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறையின் சார்பு செயலாளர் சரோஜினி சர்மா அனுப்பிய கடிதத்தில், அறிக்கையில் காணப்பட்ட முரண்பாடுகள் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
![]()





