செய்திகள் நாடும் நடப்பும்

தமிழக வர்த்தக வளர்ச்சிக்கு வேகம் தரும் வந்தே பாரத் ரயில்

Makkal Kural Official

தலையங்கம்


தமிழகத்தில் சுற்றுலா மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கு புதிய ஊக்கம் தருகிறது சமீபத்தில் அறிமுகமான வந்தே பாரத் ரெயில் சேவைகள்.

கடந்த மாதம், சென்னை-நாகர்கோவில் இடையே வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரெயில் சேவை சிறிய மற்றும் வளர்ந்து வரும் பகுதிகளையும், முக்கியமான நகரங்களையும் இணைத்து, மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றி வருகிறது.

கோவில்பட்டி, தனித்துவமான வரலாற்று முக்கியத்துவம் மற்றும் சுவையான கடலை மிட்டாய் தயாரிப்புகளால் பெயர் பகுதி, இப்போது வந்தே பாரத் ரெயில் சேவையின் முக்கிய நிறுத்தமாக உள்ளது. பாரதியார் பிறந்த எட்டயபுரம், வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் போன்ற வரலாற்று தலங்கள் மற்றும் கப்பல் ஓட்டிய தமிழன் வ. உ. சிதம்பரனார் வழக்கறிஞராக தொழில் புரிந்த ஊரும் அதுவே. சுற்றுலாப் பயணிகளையும், வர்த்தக நோக்கில் பயணிக்கும் மக்களையும் பெரிதும் கவரும்.

விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம் போன்ற நகரங்களை இணைக்கும் இந்த சேவை, புயல் வேகத்தில் 180 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது. இத்தகைய சேவைகள் மூலம் தமிழகத்தின் சின்ன-ஞ்சிறு தொழில்களும், பட்டாசு தொழிற்சாலைகளும் உடனடியாக பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன.

சென்னை-நாகர்கோவில் இடையே இயக்கப்படும் இந்த ரெயில், வழித்தடத்தில் உள்ள தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, கோவில்பட்டி, நெல்லை போன்ற முக்கிய நகரங்களில் நின்று செல்கிறது, சுற்றுலாப் பயணிகளுக்கு இந்த சேவை மெருகூட்டும் வகையில் அமைந்துள்ளது. கோவில்பட்டியின் அருகாமை நகரப் பகுதிகள் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் என நீண்ட பட்டியல் இருக்கிறது.

இந்த ரெயில்கள், ஜப்பான் மற்றும் சீனாவின் பிரபல புல்லட் ரெயில்களுடன்

கோவில்பட்டியின் அருகாமை நகரப் பகுதிகள் சிவகாசி, விருதுநகர், ராஜபாளையம் என நீண்ட பட்டியல் இருக்கிறது.

ஜப்பான், சீனாவின் பிரபல புல்லட் ரயில்களுக்கு இணையான தோற்றம் கொண்டு இருக்கும் வந்தே பாரத் ரயில்கள் 100 கிலோ மீட்டட் வேகத்தை வினாடிகளுக்குள் எட்டி ஓடும், அதிக வேகத்தில் பயணிக்கக் கூடிய இவை மகாத்மா காந்தியின் கனவான, சிறு கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இணைக்கும் உள்கட்டமைப்பு திட்டத்தை நிறைவேற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த ரெயில்கள் 180 கிலோமீட்டட் வேகம் வரை செல்லக்கூடியது என்பதுடன் பட்டாசு தொழில் மையத்தையும், சிறு வியாபார தலைநகரங்களால் இருக்கும் பல ஊராட்சிகளையும் பெரிய நகரங்களுடன் இணைய வழியை உருவாக்கி இருப்பதால் இந்த வந்தே பாரத் ரெயில் சேவைகளை பாராட்டி வரவேற்கிறது தமிழகம்,

அதிவேக சொகுசு ரெயில்கள் தமிழகத்தின் சுற்றுலா வளர்ச்சிக்கும், பொருளாதார முன்னேற்றத்துக்கும் பெரும் பங்காற்றும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *