செய்திகள்

தமிழக தேர்தல்: 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் சொந்த ஊர் பயணம்

சென்னை, ஏப். 2–

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு நேற்று முதல் 5 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதில் இன்று காலை வரை இயக்கப்பட்ட 3,065 பேருந்துகளில் 1 லட்சத்து 22 ஆயிரம் பேர் பயணம் செய்துள்ளனர்.

தமிழகத்தில் ஏப்ரல் 6 ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று வாக்களிக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் நேற்று முதல் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் 5 மையங்களில் இருந்து பேருந்துகள் புறப்பட்டு சென்றது.

நேற்று இரவு வரை வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் சிறப்புப் பேருந்துகள் என மொத்தம் 2,535 பேருந்துகளும், இன்று காலை 9 மணி நிலவரப்படி வழக்கமாக இயக்கப்படும் 510 பேருந்துகளும், 20 சிறப்புப் பேருந்துகள் என இதுவரை இயக்கப்பட்ட மொத்தம் 3,065 பேருந்துகளில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 600 பயணிகள் பயணித்துள்ளனர்.

மேலும் 5ந் தேதி வரை பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள இதுவரை 30,237 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என்று போக்குவரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *