செய்திகள்

தமிழக தமிழாசிரிய கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் ராமானுஜம் காலமானார்

சென்னை, ஜூலை 7–

தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் புலவர் சா.இராமானுஜம் நேற்று காலை வயது முதிர்வு காரணமாக சென்னையில் காலமானார்.

1979 முதல் – 1992 வரை கழகத்தின் மாநில இணைச் செயலாளர், மாநிலத் தலைவராகப் பொறுப்பு வகித்தவர். மொத்தம் 14 ஆண்டுகள் மாநிலப் பொறுப்பில் இருந்து பல்வேறு உரிமைகளைப் பெற்றுத் தந்தவர்.

எம்.ஜி.ஆர். தமிழக முதலமைச்சராக இருந்த பொழுது தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் ஏறத்தாழ 340 தமிழாசிரியப் பணியிடங்கள் உபரி என்று கண்டறியப்பட்டு ஒரே நாளில் 340 தமிழாசிரியர்களும் தமிழக அரசால் பணி நீக்கம் செய்யப்பட்டனர். வாழ்வாதாரத்தையே இழந்து தவித்த தமிழாசிரியர்களின் இன்னல் தீர்க்க விரைந்து செயல்பட்ட புலவர்.சா. இராமானுஜம் முதலமைச்சரைச் சந்தித்து 340 பேரையும் மீண்டும் பணியிலமர்த்திய சாதனைக்குச் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழாசிரியர்களின் வளர்ச்சிக்காக அயராது உழைத்த புலவர் சா.இராமானுஜம் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அன்னாரை இழந்து வாடும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதலையும் சிறப்புத் தலைவர் புலவர்.ஆ.ஆறுமுகம், தலைவர் சா.மருதவாணன், பொதுச் செயலாளர் சு.நாகேந்திரன், பொருளாளர் முனைவர்.இரா.கோவிந்தன், அமைப்புச் செயலாளர் இராசா.ஆனந்தன், தேர்வுச் செயலர் எ.சரவணபவன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *