செய்திகள்

தமிழகத்தைப் போலவே புதுவையில் கடைகள் காலை 6 மணிக்கு திறந்து மதியம் 1 மணிக்கு அடைப்பு

Spread the love

புதுவை, ஏப். 7 –

தமிழகத்தைப் போலவே புதுவையில் கடைகள் காலை 6 மணிக்கு திறந்து மதியம் 1 மணிக்கு அடைக்கப்படும் என்று புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் கூறியதாவது:–

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.5 கோடி வந்துள்ளது. காரைக்கால் , ஏனாம் பகுதிகளில் கொரோனா தொற்று பரவல் இல்லை. புதுவையில் கொரோனா தொற்று 4 பேருக்கு உள்ளதாக கண்டறியப்பட்டது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படடு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள்.

கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டிய முககவசம் , மருந்து, வெண்டிலேட்டர் வாங்க ரூ.300 கோடி தேவை. அந்த நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும் என்று முதல்வர் நாராயணசாமி கூறினார்.

புதுவை கலெக்டர் அருண் கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றிக் கூறுகையில் புதுவையில் 17 பேர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டனர் . அவர்களில் 4 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறார்கள். 3 பேர் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்கள்.

3 பேருக்கு தொற்று இல்லை. அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டு விட்டனர். மற்றவர்கள் கண்காணிக்கப்பட்டுவருகிறார்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *